ஏவிசிசி பாலிடெக்னிக் – 91 பேட்ச் – அப்டேட்:

wp-15815138552624968990881890515864.jpg

மலர்ச்சி மாணவரும் புதுச்சேரியின் பிரபல தொழில்முனைவோருமான முத்துக்குமரனின் ‘சிவா பிரிண்ட்ஸ்’ புதிய அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதே, நப்பின்னையிடமிருந்து அழைப்பு, அவரும் ஜெகதீஸ்வரியும் விழாவிற்கு வருவதாக.

‘யாரோ ஒருவரின் அலுவலகத்திறப்பு விழா!’ ‘நான் அழைக்கப்படவில்லை, எதற்குப் போக வேண்டும்?’ என்ற திசையில் சிந்திக்காமல், ‘என் க்ளாஸ்மேட்டப் பாக்கப் போறேன்!’ என்ற ஒரே முடிவில் வந்து திக்குமுக்காடச் செய்து விட்டனர் என்னை.  நப்பின்னையும், ஜெகதீஸ்வரியும் அவரது கணவரும் என மூவரும் வந்திருந்தனர்.

திறப்பு விழா, ப்ரேயர், உரை என முக்கிய நிகழ்வுகள் முடிந்த பின்னரே வந்தனர் என்றாலும் அந்நிறுவனத்தின் ஊழியர்களோடு நாம் கொண்ட கேள்வி – பதில் உரையின் போது கலந்து கொண்டனர்.

ஜகதீஸ்வரியின் கணவர் ஏவிசிசிபியின் முதல் பேட்ச்சில் (1986) சிவில் முடித்தவர். திருவிடைமருதூரிலிருந்து புதுச்சேரி வந்து இங்கேயே வசிக்கத் தொடங்கிவிட்டனர்.  மனைவிக்காக இந்த நிகழ்வுக்கு வந்த அவர் என்னிடம் ‘ வீட்டுக்கு வரணும் நீங்க!’என்ற போது, ‘சரிங்க’ என்று போனேன்.

அழகான வீடு. மூத்த மகன் பொறியியல் முடித்து சென்னையில் மென்பொருள் வல்லுநனாக இளைய மகன் பள்ளியில் என இரு பிள்ளைகளும் இல்லாத நேரத்தில் போயிருந்தேன்.

கணவரின் வேலை என்எல்சியில் வசிப்பது புதுச்சேரியில் என இருக்கும் நப்பின்னையோடும் ஜகதீஸ்வரியோடும் கொஞ்சம் பேச முடிந்தது.  எதேச்சையாக புதுவைத் தெருவொன்றில் நிகழ்ந்ததாம் நப்பின்னை – ஜெகதீஸ்வரி சந்திப்பு.

மீனா பற்றி விசாரிப்பு வந்தது இருபுறத்திலிருந்தும். வனிதாவிற்கு உடல் நலம் சரியில்லை என்றும் சொல்லப்பட்டது எனக்கு.

ஜகதீஸ்வரியின் கணவரின் தொழில் நண்பர்கள் பலர் மலர்ச்சி மாணவர்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடென்றாலும் அழகாகக்  கட்டியுள்ளார். ஜக்கி வாசுதேவை போற்றிப் பின்பற்றுகிறது இக்குடும்பம்.

இந்தப் பெண்கள் மீதும், ஜெகதீஸ்வரியின் கணவர் மீதும் பெரிய மரியாதை வந்தது எனக்கு.

சிறுபிள்ளைகளாக சிறுபிள்ளைத் தனமாக இருந்தவர்கள் இருபத்தியெட்டு ஆண்டுகள் கழித்துச் சந்திக்கும் போது, அடுத்தவர் வாழும் விதம் கண்டு வரும் மகிழ்வும் அதனால் எழும் நிறைவும் உன்னதம்.

சென்னை நோக்கிப் பயணிக்கிறேன்.

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச் சாலை
12.02.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *