கங்கை கொண்ட சோழபுரம்

வணக்கம் பாலா.

உண்மையாகவும் இருக்கலாம், பின்னே வந்தவர் தன் பார்வையில் பட்டதை ‘இதுதான் நிஜம்!’ என்று பரப்பியுமிருக்கலாம்.

பெருவுடையார் கோவில் ராஜராஜனின் ஆட்சியின் 25ஆம் ஆண்டின் 275ஆம் நாளில் கட்டி முடிக்கப்பட்டது. ராஜேந்திரனுக்கு அப்போது இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. சோழப்படை தலைவனாகவே ராஜேந்திரன் இருந்தான். இருவரும் ஒன்றாக 25 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

கி.பி. 1014ல் ராஜராஐர் சிவலோக பதவியடைகிறார். அதன் பின்னர் ராஜராஐன் அரசைவை முழுவதுமாக ஏற்கிறான்.

சாளுக்கிய போர் ( தன் தங்கையின் மகனின் அரியணைக் காக்க), ஈழப்போர் முடிந்து, அதன் பின்னரே புதிய தலைநகரம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது. தஞ்சையை விட்டு நகர்ந்து ‘ஜெயங்கொண்டம்’ போவது முடிவாகிறது.

தலைநகரம் – தந்தை செய்ய சிவ கற்றளியைப் போலவொரு கற்றளி, அருகிலேயே ஒரு பெரிய பாசன ஏரி என திட்டம் உருவாகிறது.

ஜெயங்கொண்டம் நகர் நிர்மாணிக்கப்படுகிறது, அரண்மனை கட்டப்படுகிறது. பெரிய ஏரி ஒன்று வெட்டப்படுகிறது. சிவனுக்கு மிகச் சிறந்த கற்றளி எழுப்பப் படுகிறது.
தன் தந்தைக் கட்டியதை விட உயரமாக இருக்கக் கூடாது என்று ஒரு அடி குறைவாகவே அது கட்டப்படுகிறது.

இந்த நிலையில் திரும்பவும் சத்யாசிரியனால் ( சாளுக்கியம்) சில தொல்லைகள், போருக்குப் புறப்படுகிறான். சாளுக்கியம், கங்கபாடி, நுளம்பாடி என வரிசையாக வென்று கங்கை வரை சென்று தான் எழுப்பும் சிவனுக்கும் தான் வெட்டும் ஏரிக்கும் கங்கை நீரை மொண்டு வருகிறான். ( இந்தப் படையெடுப்பில்தான் தன் மகனொருவனைப் பலி கொடுக்கிறான் ராஜேந்திரன்)

( ராஜேந்திரன் வடக்கே இருந்த போது, ஜெயங்கொண்டத்தை பிடிக்க பாண்டியர் படை வந்ததும், தளபதியொருவனையும் ஒரு படையையும் சோழன் அனுப்பி வைக்க தங்கள் மீன் கொடியை சுருட்டிக் கொண்டு அவர்கள் ஓடியதும் ‘மீன்சுருட்டி’ ஊர் பெயர்க்காரணம்)

சோழதேசம் திரும்ப வந்தவன் கங்கை நீரை பாசன ஏரியில் விட்டு ‘பொன்னேரி’ ‘சோழ கங்கம்’ எனப் பெயர் சூட்டுகிறான். கங்கை நீரைக் கொண்டு கற்றளிக்கு குடமுழுக்கு செய்கிறான். அது கங்கை கொண்ட சோழபுரமாக பெயர் பெறுகிறது.

நிற்க. தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டி முடிந்து, பல ஆண்டுகள் கழித்து ராஜராஜர் இறந்து, பல ஆண்டுகள் கழித்தே புதிய தலைநகரம் ‘ஜெயங்கொண்டம்’ என்பது முடிவாகிறது. அதன் பின்னரே சிவனுக்கு கோவில் என்பது முடிவாகிறது. தஞ்சைக் கோவிலின் கலைஞர்களை பாதியிலேயே அழைத்துக் கொண்டு போனான் ராஜேந்திரன் – என்பது உண்மையாக இருக்க முடியாது

கங்கை கொண்ட சோழ புரம் கோவிலின் ஒரு புறம் அரண்மனையின் முக்கிய ராணுவ – பொக்கிஷ காப்பகமாக பயன்படுத்தப்பட்டது. தவிர. வேறு வேறு தேசங்களிலிருந்து ஊர்களிலிருந்து சோழப்படைகள் பெயர்த்து வந்த சிலைகள் வெளியே வைக்கப்பட்டன. இந்தப் பகுதி சிதிலமடைந்து விட்டது.

நன்றி!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    14.02.2020

( ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் ஒரு கருத்துரையாடலில் பகுதியாக எழுதப்பட்டது. இங்கே பகிர்கிறேன்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *