நாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…

முப்பத்தியெட்டு டிகிரி வெயிலின் வெப்பத்தை அரை மணி நேரத்தில் 50 டிகிரி வெப்பமாக மாற்றிப் பார்க்க வேண்டுமா?  காரை ஓர் அரை மணி் நேரம் வெய்யிலில் நிறுத்துங்கள். கதவைத் திறக்கும் போது ‘நெருப்புடா…’ என்ற படி வெப்பம் முகத்தில் அறையும். அடுத்த சில நிமிடங்களில் உடலை தகிக்க வைத்து விடும், மூடிய காருக்குள் சூடாகிக் தகிக்கும் அனல் காற்று.

நகரத்தில் காரை நிழல் தேடி நிறுத்துவது நடைமுறையில் இயலாதது.   வெயிலில்தான் நிறுத்திவிட்டுப் போக வேண்டியிருக்கும்.

அப்படியொரு கத்தரி வெய்யில் நாளில் வெப்பம் ஒழுகும் உச்சி வேளையில் கார் நிறுத்த ஒரு சிறு ஆலமரம் நிழல் தந்தால்…  *நாம் வைத்த மரக்கன்றே மரமாக வளர்ந்து நின்று இன்று நமக்கு நிழல் தந்தால்…* கூடுவது கூடுதல் *ம…கி…ழ்…ச்…சி…!*

‘செல்லமே… பெரிசாயிட்டியா நீ, விழுது வேற விட்டிருக்கியா!’

மலர்ச்சி அலுவலகம் எதிரில் ஆலமரக் கன்றுகள் மரங்களாக உயர்ந்து நிற்கின்றன.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
20.05.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *