சசிகலா துறப்பு – 2

(சசிகலா – தொடர்ச்சி)

அதிமுக பற்றிய அவரது வழக்கு மார்ச் 15 வரை நீதிமன்றத்தில் இருக்கிறது. அது வரை தேர்தலை எதிர்கொள்வதில் அவருக்கு நிலைப்பாடு குறித்து சிக்கல் இருக்கலாம்.

அமமுகவில் இறங்கி வேலை செய்தால், அவர் அதிமுக இல்லை என்றாகிவிடும். அதிமுகவில் அவர் இறங்கினால் சட்டச் சிக்கல்கள், ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி மற்றும் அமைச்சர்கள் பாய்வர்.

மார்ச் 15 வரை காத்திருந்து அதன் பிறகு ஏப்ரல் தேர்தலுக்கு பணியாற்ற முடியாது.

அமமுகவை தினகரன் கவனித்துக்கொள்ள, சசிகலா அரசியலை விட்டே விலகுவதாக அறிவிப்பது அவரது நிலையை இப்போதைக்கு காப்பாற்றும். தேர்தலுக்குப் பிறகு ஆட்சியும் காட்சியும் மாறினால், திரும்ப எழலாம். ஆட்சி மாறவில்லையென்றால், காத்திருந்து வேறு வேலைகள் செய்யலாம்.

ஓய்வெடுத்துக் கொண்டே எடப்பாடியை தோற்கடிக்க திமுகவிற்கே கூட உதவலாம்.

பெங்களூரிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் வருகை, 150கோடி செலவு செய்து வரவேற்பு என்பனவையும் நினைத்துப் பார்த்தால், இது தற்காலிக பதுங்கலாகவே தோன்றுகிறது.

  • மணக்குடி மண்டு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *