எத்தனையாண்டுகள் ஆனாலும் தொடர்கிறது குமுதத்தில் குறுக்கெழுத்து முடிக்கும் இந்த விளையாட்டு!

சிறுவனாக இருந்த போது
சித்தப்பா வாங்கி வரும் குமுதத்தில் தொடங்கி, கல்லூரி காலத்தில் தினமலர் வாரமலரிலும் என கூடி, இத்தனையாண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது விருப்பமாக.

இதனால்தானோ என்னவோ, இதற்கு முன்பு ஆசிரியாக பணி செய்த தமிழ் இதழில் வலுக்கட்டாயமாக குறுக்கெழுத்துப் பகுதியை சேர்ந்தேன். ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழிலும் அது தொடர்கிறது. ( திருவண்ணாமலை ‘காந்திமதி’, சென்னை ‘ஜெயசுதா கதிரவன்’ போன்ற வாசகர்கள் தொடர்ந்து குறுக்கெழுத்து பதில் எழுதி அனுப்புகின்றனர் என்பது கூடுதல் காரணம்)

மணக்குடியிலிருந்து வந்தவுடன் கண்ணில் பட்டது புதுக்குமுதம். காலை மாலை இரவு என கணக்கிடுவதில்லை, கண்டவுடன் கையிலெடுத்து விடுகிறது ஆர்வம். (குமுதம்) குறுக்கெழுத்தை முடிப்பது ஒரு சுவராசியம்தான்!

ஒரு வகை போதை!? இருந்து விட்டுப் போகட்டுமே. மூளையின் இரு பாகங்களையும் இயக்கி வேலை செய்ய வைக்கும் ஒரு விளையாட்டு, முதுமையின் ‘அல்சைமரை’ (மறதி நோய்) வர விடாமல் செய்யும் விளையாட்டு… போதையாக இருந்தால் இருந்து விட்டு போகட்டுமே!

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    07.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *