ஐ ஃபோன் – பாட்டி

அந்தக் காலத்தில நாங்கல்லாம் இப்படி…’ என்று பகிர்வதில் தவறில்லை, அதையே சொல்லிக் கொண்டு இன்றைய நடைமுறைக்கு மாற விரும்பாமல் எதிர்ப்பிலேயே நிற்பது எதிரியத்தை வளர்த்து விடும் தவறு.

தான் கொண்ட பழக்கங்களை அது நல்லதென்றால் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வேன், ஆனால் அதைத் தொடர்வேன் என்பது வாழ்வோடு இயைந்து வளரும் இன்றைக்குத் தேவையான நன்னெறி.

ஆவியில் வேகவைத்த அரிசியும் உளுந்தும் கலந்த இட்லி நல்லதென்றால், அதை ஏன் விட வேண்டும்? இன்றைய நவீன இட்லி குக்கர் பயன்பாட்டிற்கு மாறினால் போதுமே!

மாற்றத்தினோடு இணைந்து கொள்பவர்கள் வாழ்க்கையோடு நடுப்பாதையில் இணைந்து மகிழ்வாய் பயணிக்கிறார்கள். மாற மறுப்பவர்கள் ‘பாஸ்டாக்’ பொருத்தாமல் ஓரமாய் நின்று நீண்ட வரிசையில் நெடுநேரம் எடுத்து கடப்பதைப் போல அழுத்தம் கொள்ளுகிறார்கள்.

கால் நீட்டி அறிவாள் மனையில் காய்கறி நறுக்கும் போது, அருகே ஐ ஃபோனை வைத்துக் கொண்டு, ஆப்பிள் ம்யூசிக்கில் ‘சஹஸ்ரநாமம்’ ஒலிக்கவிட்டு, கூடவே முணுமுணுக்கும் 76 வயது பாட்டியை இன்று காலை கவனிக்க நேர்ந்தது.

வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதற்கு ஏற்ப அதனுடன் இணைந்து இயைந்து ஓடுவதும், தயங்கி விலகி புலம்பி நிற்பதும் அவரவர் மனதிலையே. அவரவர் மனநிலைக்கேற்ப சிலர் வாழ்க்கையை வாழ்கிறார்கள் சிலர் வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

வாழ்வதும் கழிப்பதும் அவரவர் விருப்பம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
08.04.2021

#Life
#LivingLife
#LifeGoesOn
#iPhonePaatti

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *