கடும் போட்டி தேர்தல் 2021

காலையில் மாலனின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. தமிழகத்தின் வாக்கு சதவீதம், எடப்பாடி தொகுதி, கொளத்தூர் தொகுதி சதவீதம், கடந்த தேர்தல், பொதுப்புத்தி என நிறைய கணக்கிட்டு ஆய்வு செய்திருக்கிறார் அவர். 

அதன் கடைசிப் பத்தியை இப்படி முடித்திருக்கிறார்.

//  திமுக தரப்பில்,  கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் இதே போன்று 72 சதவிகிதம் இருந்ததையும் அந்தத் தேர்தலில் தங்கள் கட்சி அமோக வெற்றி பெற்றதையும் சுட்டிக் காட்டி அதே போன்ற வெற்றி இம்முறையும் தங்களுக்குக் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

அதிமுக தரப்பில்,
அலை ஏதும் இல்லாததால் இது தங்களுக்கு சாதகமான தேர்தல் என்றும் அலை இல்லாத எந்தத் தேர்தலிலும் திமுக பெரும்பான்மை இடங்கள் வென்று ஆட்சிக்கு வந்ததில்லை என்றும் கூறுகிறார்கள்.

என்னுடைய கணிப்பு என்னவென்றால், இது கடுமையான போட்டி நிலவும் தேர்தல். பல தொகுதிகளில் 10,000க்கும் குறைவான வாக்குகளில் முடிவுகள் தீர்மானிக்கப்படும். கட்சிகளின் பலம் மட்டுமின்றி வேறு பல அம்சங்களும் – வேட்பாளர், ஜாதி, பணம் – முடிவுகளைத் தீர்மானிக்கும்.  //

( மேலுள்ளது மாலனின் கருத்து, என் கருத்தல்ல. திமுக 130+ பெற்று ஆட்சியமைக்கலாம் என்பது என் ஊகம். நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.)

மே 2 வரை காத்திருப்போம்.

– மணக்குடி மண்டு
13.04.2021

//

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *