வந்தது கொரோனா ஆயுர்வேத மருந்து!

கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து ஒன்றை அறிவித்து விட்டார்கள், 100 நோயாளிகளுக்கு தந்து சோதித்து வெற்றி கண்டு விட்டார்கள், ஐசிஎம்ஆர் ஒப்புதல் தந்துவிட்டது!

மருந்து கொடுக்கப்பட்ட 5 நாளில் 86% தொற்றும், 10 நாளில் 100% தொற்றும் குணமாகியுள்ளதாம்.

க்ளெவிரா மாத்திரை, சிரப் – என இரண்டு கூட்டு மருந்துகளை அறிவித்திருக்கிறார்கள்.

பப்பாளி, காட்டுவேம்பு, நில வேம்பு, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, இஞ்சி, மிளகு, பற்படாகம், சீந்தில் கொடி ஆகியவற்றிலிருந்து செய்நப்பட்டதாக சொல்லப்படுகிறது இம் மருந்துகள்.

காலை, மாலை என உட்கொள்ள வேண்டிய இந்த மாத்திரை ரூ.11/-க்கு கிடைக்கிறதாம். டெங்கு காய்ச்சலுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்ட க்ளெவிரா மாத்திரை கொரோனாவிற்கும் குணமளிக்கிறது என்று சோதித்து அறிவித்திருக்கிறார்கள். கல்லீரலுக்கு எந்த பக்கவிளைவும் இல்லை என்று ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அரசு முடிவெடித்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளில் வழங்க வேண்டியதுதான் பாக்கி!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
22.04.2021

#CoronaMedicine
#CovidAyurVedha
#CovidMedicine
#CovidCure
#Clevera

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *