ஏற்கனவே அறிந்த பாத்திரங்களை வேறு வண்ணத்தில் என்னுள்ளே உலவ விட்ட பெரும் எழுத்து சித்திரக்காரர்

நல்ல எழுத்து என்பது ஒரு தவம் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு ஓர் அலைவரிசைக்கு நம்மை பொருத்திக் கொள்ளும் போது, நம் உள்ளிருக்கும் படிமங்களை தொட்டுக் கொண்டு,  எழுத்து அதுவாக நம் வழியே நிகழ்த்திக் கொள்ளும்.

சில எழுத்தாளர்கள் ஒரு சாதகர்களாகவே என் கண்ணுக்குத் தெரிவார்கள்.  இவர் அப்படியொருவர். 

இவரது சித்தாந்தங்களோடு முரண்பட்டு நிற்பவர்கள் உண்டென்றாலும், இவரது எழுத்தின் வீச்சை குறை சொல்லவே முடியாது அவர்களாலும்.

‘சமகால எழுத்தாளர்களின் வரிகளை நான் படிப்பதில்லை!’ என்று சொல்வதே ஒரு ‘ஃபேஷன்’ மனப்போக்கு என்கிற இன்றைய நிலையில், வாசிப்பை ஊக்குவித்து, புதிய படைப்புகளை கொண்டாடும் (சுஜாதா போல) ஓர் எழுத்தாளர் இவர்.    

சில வேலைகளில் ஓர் ‘எழுதித்தள்ளும் இயந்திரமோ, இவர்!’ என்று வியத்திருக்கிறேன்.
‘யானை டாக்டர்’ ‘சோத்துக்கணக்கு’ ‘ஓலைச்சிலுவை’ என இவரது எழுத்து என்னை தாக்கி கும்மு கும்முன்னு கும்மியிருக்கின்றன.  தேவ விரதன், விசித்திரவீரியன், விதுரன் என ஏற்கனவே அறிந்த பாத்திரங்களை வேறு வண்ணத்தில் என்னுள்ளே உலவ விட்ட பெரும் எழுத்து சித்திரக்காரர்.

நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். உடல் நலமும் நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் பெற்று எழுதித் தள்ளட்டும் இப்பெருந்தகை.

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயமோகன் சார்!

என்னை உங்களுக்குத் தெரியாது, தேவையில்லை. உங்களை உங்கள் எழுத்துக்களை அறிவேன் நான்.

பிரார்த்தனைகள்! 

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
[email protected]
23.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *