இன்று சூரசம்ஹாரம்

Soorasamharam

Soorasamharam

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் தனது வெஹிக்கிள் டெலிவரி எடுத்த தினம் இன்று.

எத்தனையோ யுகங்களுக்கு முன்பு, ‘மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச,’ என்று திருப்புகழில் வருவதுபோல் செந்தூர் கடற்கரையில் நின்று அவன் வடிவேலெறிந்த தினம். இன்று செந்தூரின் கடற்கரை சூரசம்ஹார விழாவால் அல்லோலகல்லோலப் படும். நீல சமுத்திரமும், மனித சமுத்திரமும் சங்கமிக்கும்.

நாள் முழுக்க பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் விரதமிருந்து, இரவெல்லாம் கண் துஞ்சாது அக்காவோடு தாயம் ஆடிய அம்மாவிற்கு அருகில் அப்படியேப் படுத்துத் தூங்கிப் போன என் அரைக்கால் சட்டைப் பொழுதுகள் நினைவில் வந்து போகின்றன.

மற்றக் கடற்கரைகளைப் போல் அடித்துச் செல்லாமல், அன்பாய் கால்களைத் தழுவி முத்தமிட்டுச் செல்லும் கடல் செந்தூரின் அதிசயம். சீக்கிரம் போய் கால் நனைய நிற்க வேண்டும் போல் இருக்கிறது.

2 Comments

  1. shriram

    ஐயா, தங்களின் எழுத்தும், கருத்தும் மிகவும் அருமை, நாள் முழுவதும் படித்துக்கு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. தொடரட்டும் உங்களது பணி…………..

    Reply
    1. paramanp (Post author)

      நன்றி அய்யா. இறையருள்!

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *