காஃபி் ஓர் உள்ளக் கடத்தி

wp-1623298858256.jpg

காஃபி் ஓர் உள்ளக் கடத்தி

ஒன்றில் அமிழ்ந்து கிடக்கும் உள்ளமதை
ஓரிரு நிமிடங்களில் மீட்டுக் கடத்திவிடும்

தொலைவிலிருப்பவரை அருகிலும்
அருகிலிருக்கும் போதே தொலைவுக்குமென

கடத்திவிடும் ஓரிரு வாய்
காஃபி உறிஞ்சல்கள்

காஃபியின் கசப்பு
விரும்பிகளுக்கு உவப்பு

சிலருக்கு உடல் தேவை
சிலருக்கு உள்ளத் தேவை
பலருக்கு மணித் தேவை

காஃபி ஒரு முரண்
சிலருக்கு ஆசுவாசம்
சிலருக்கு தளர்வு
சிலருக்கு உயிர்ப்பு
சிலருக்கு குவியம்

அதிகமருந்துவோர்க்கு அசிடிட்டி
அருந்தவேயருந்தாதவர்க்கு ஆரோக்கியம்
குறைவாய் குடிப்போர்க்கு குறுகுறுப்பு

அடிமையாய் இல்லாத வரை
அனுபவித்தருந்தலாம்
நற்காஃபியை!

வாழ்க!

( காஃபி வித் அம்மா)

– பரமன் பச்சைமுத்து
குளோபல் மருத்துவமனை
10.06.2021

#CoffeeWithAmma
#GlobalHospital
#Coffee
#CoffeeLovers

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *