சிறந்த செயல்பாடு : வார் ரூம்!

மலர்ச்சி மாணவரொருவரின் குடும்பம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள அவர்களது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. திறந்தால்….

மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவர் ஒருவரோடு வந்து நிற்கின்றனர். முழு கவச உடை அணிந்த அந்த மருத்துவர், தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியை வீட்டின் உள்ளேயே வந்து பரிசோதித்து, நிலையறிந்து அடுத்து செய்ய வேண்டியவற்றையும் மருந்துகளையும் பரிந்துரைக்கிறார். கபசுரக்குடிநீர் தூள் பொட்டலங்கள், பாராசிட்ரமால், ஊட்டச்சத்து மாத்திரைகள் ஆகியவற்றை தந்து விட்டு ‘உடம்ப பாத்துக்கோங்க! சீக்கிரம் குணமாயிடுவீங்க!’ என்று சொல்லி விடை பெறுகிறார்கள்.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுத்ததை வைத்து, அதன் வழியே வீட்டிற்கே வந்து விடுகின்றனர். ‘வார் ரூம்’ அமைப்பு அசத்துகிறது.

இந்த வழிகாட்டுதலைதான் அரசு நிர்வாகம் மக்களுக்கு தரவேண்டும் என்று  கூவினோம் மே மாதம். சிறந்த செயல்பாடுகள்!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
13.06.2021

#TNcorona
#Covid19
#TN

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *