ஜெ வழி

‘சங்கி மாப்ள! திமுக கலைஞர் வழியில ஆட்சி பண்ணல, ஜெயலலிதா வழியிலதான் ஆட்சி பண்ணுது!’

‘என்ன இப்படி சொல்றிய!’

‘அதிமுக வெளிநடப்பு, தர்ணா, ஓபிஎஸ் கைது செய்திய  பாத்தீயா?’

‘பாத்தேன் மச்சான். எடப்பாடியை காணோம்னு பரப்பப்படும் செய்தியையும் பார்த்தேன்!’

‘எதுக்கு இந்த தர்ணா? கைது?’

‘ஜெ பல்கலை கழகத்தை கேன்சல் பண்ணி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோட சேர்க்கறாங்களே, அதை எதித்து. பேச வாய்ப்பு தரலைன்னு ஏதோ காரணம் வேற சொல்றாங்க! இதில் எங்க ஜெயலலிதா வழி?’

‘வர்றேன், வர்றேன்! பள்ளிப் பைகளில் ஜெ – எடப்பாடி படம் போட்டிருந்ததை அப்படியே அனுமதித்தவர்ன்னு கொண்டாடினாங்களே, இப்ப ஜெ பல்கலைகழகத்தை இடிச்சி கலைச்சி தூள் ஆக்குவதை என்ன சொல்வாங்க?’

‘அதுக்குதான் சபையிலயே அமைச்சர் சொல்லிட்டாரே!’

‘என்ன சொன்னாரு?’

‘கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தை தூக்கிட்டு பேர் மாத்தனாங்க ஜெயலலிதா, கட்டிய சட்டசபையை மருத்துவமனையா மாத்தனாங்க, திருவள்ளுவர் சிலையை பராமரிக்கல, கலைஞர் கொண்டு வந்தத எல்லாத்தையும் ஜெயலலிதா மாத்தனாங்க காழ்ப்புணர்ச்சியலன்னு விலாவாரியா பேசியிருக்காரே!’

‘அதான் மாப்ள! கலைஞர் கொண்டு வந்ததையெல்லாம் காழ்ப்புணர்ச்சியில ஜெயலலிதா நீக்கினாங்க. அதுதான் ஜெயலலிதா வழி, சரிதானே?’

‘ஆமாம் மச்சான்! இப்ப ஜெ பல்கலைக்கழகத்தை இவங்க நீக்கறாங்க. இது நல்லெண்ணமா, காழ்ப்புணர்ச்சியா?’

‘ஆங்… காழ்ப்புணர்ச்சிதான் மாமா!’

‘அதான் சொல்றேன். இவங்க ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்யறாங்க!  அவங்க அப்படி செஞ்சாங்கன்னு கொறை சொல்லியே நீ வந்து, நீயும் அதையே செஞ்சா எப்படி? கொஞ்ச நாள்ல மருத்துவமனை சட்டசபையா மாறும் நீ பாரேன்!’

‘என்னமோ மச்சான்!’

‘நீ சரியான சங்கி மாப்ள!’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *