ஜெயமோகன் – பொன்னியின் செல்வன் – – விகடன் நேர்காணல்

ஜெயமோகனின் நேர்காணல் விகடனில் – நன்று.

ஏன் விருதுகளைப் புறக்கணிக்கிறார், பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஏன் எழுதுவதில்லை? (பல காலமாக அவரை இதையே கேட்கிறார்கள், அவரும் திரும்பத் திரும்ப பதில் சொல்கிறார்), பொன்னியின் செல்வன் வசனம் அனுபவம் என கேட்கப்பட்டதற்கு சரியான பதில்கள்.  ஆனாலும், ‘விருது கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன்!’ ‘ஞானியாவற்கான தகுதிகள் கொண்டவனாக உணர்கிறேன்!’ போன்ற அவரது வாக்கியங்களை பிடித்துக் கொண்டு, அதற்கு முன்னும் பின்னும் அவர் சொன்னதை விட்டுவிட்டு, அவரை சிலர் தூற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

‘எழுத்தாளனின் அளவுகோல் நுண்ணர்வு சார்ந்தது. சிந்தித்து முடிவெடுப்பதை விட  நுண்ணுர்வு சார்ந்து முடிவுடுப்பதே நல்லது’ என்ற அவரது கருத்து மற்றவர்களிடமிருந்து முற்றிலும்  வேறு திசை கொண்டது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவரது பங்கைப் பற்றி சொல்கையில், ‘ராஜராஜ சோழனின் பெயரை இந்த நாடு முழுவதும் கொண்டு சேர்த்தால் இந்தப் படம் வெற்றி!’ என்று மணிரத்னம் சொன்னதாக குறிப்பிட்டிருக்கிறார். ஐந்து பாகங்கள் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ புதினம் முழுவதுமே ராஜராஜன் ராஜராஜனாக ஆவதற்கு முன்னால் வடித்த கதையாகவே வரும். திருவயிறு உதித்த மதுராந்தக உத்தம சோழன், கண்டராதித்தர், ஆதித்த கரிகாலன், வீரபாண்டியன், பார்த்திபேந்திர பல்லவன், பழுவேட்டரையர், காலாந்தக கண்டர், பராந்தக சுந்தர சோழர், குந்தவை என பலரும் வந்தாலும், ராஜராஜன் ராஜராஜனாக ஆவதற்கு முந்தைய கட்டத்து அருள்மொழிவர்மனாகவே வருவார். அவர் ஆட்சியோ, அரசேற்பதோ புதினத்தில் இல்லை. எப்படி காட்டப்போகிறார் மணிரத்னம் என்பது தெரியவில்லை. ஒருவேளை படத்தி்ன் இறுதியில், ‘இவர்தான் பின்னாளில் இவராக உருவெடுத்து, இப்படி ஆட்சி செய்தார்’ என்று சொல்லும் குரல் பதிவோடு காட்சிகளை ஓட விட்டு தஞ்சை கோபுரத்தை காட்டுவார்களோ என்னவோ! காத்திருப்போம்.

ஜெயமோகனி்ன் நேர்காணல் நன்று. இன்னும் சில பக்கங்கள் ஒதுக்கி இன்னும் சில கேள்விகள் கேட்டு அவரிடம் பதில் வாங்கி பிரசுரித்திருக்கலாம் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
01.09.2021

#Vikatan
#JeMo
#JeyaMohan
#PonniyinSelvan
#Maniraynam
#PS1

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *