பிள்ளகள் என்றால்

நாம ரொம்ப பெரிய ஆளுங்க இல்லன்னாலும், கொஞ்ச பேர் நம்ம நேரத்துக்காக காத்துகிட்டு இருக்காங்க.

நம் ஆஃபீஸில நிறுவனத்துல பலர் வேலை செய்யறாங்க. பலர் சேர ஆசைப்படறாங்க.

எல்லா வேலையையும் விட்டுட்டு ஒதுக்கி வச்சிட்டு உட்கார்ந்துருக்கோம் ஒரு அலுவலகத்தின் வெளியே ஒரு இருக்கையில் ஒன்றரை மணி நேரமாக.

உள்ளே மகள் இண்டர்வ்யூக்கு போயிருக்கிறாள் என்பதற்காக.

அவளாகவே எங்கோ விண்ணப்பித்து தேர்வெழுதி, ஆன்லைனில் எல்லாம் முடித்து இன்று நேர்முகத் தேர்வு சந்திப்பு என்றாள் காலை நான் அலுவலகம் கிளம்பிய போது. தனியாக அவளை அனுப்ப வேண்டாமே என்று எல்லலாத்தையும் தள்ளி வச்சிட்டு துணையாக வந்து வெளியில் காத்திருக்கிறேன்.

பிள்ளைகள் என்றால் எதையும் செய்து விடுகிறோம்தானே!

சிவாய நம!

  • பரமன் பச்சைமுத்து
    ஹாடோஸ் ரோடு
    16.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *