
பர்சானபுரியின் தேவகர் தனது செல்ல மகள் தேவகியை, குலத் தொழில் மாறி நூல் கற்று அமைச்சனாகிப் போன வசுதேவனுக்குத் தந்து விடக் கூடாதென்பதற்காகவே, திமிலும் திமிறும் கொண்ட ஏறுவை மன்றிலில் அடக்குபவனே மகள் கொண்டு போவான் என்றறிவிக்க, வசுதேவனால் முடியாதிது என்றெல்லோரும் எண்ணியிருக்கும் வேளையில் களத்தில் குதித்து காளையையடக்கி தங்கையைத் தூக்கிச் சென்றானாம் ஆளும் கம்சன் தன் மனமுவந்த வசுதேவனுக்காக என்று சொல்கிறது ஜெயமோகனின் ‘நீலம்’ புனைவு.
( என்ன, இப்படி ஒரே பெரிய வாக்கியத்தில் சொல்லியிருக்கேன்னு பாக்கறீங்களா? இந்த மாதிரி நூல்கள் படிச்சா பின்ன வேற என்ன ஆகும்!?)
– பரமன் பச்சைமுத்து
13.03.2022