வாழ்க்கை வழிப் பயணம்…

Bangalore-to-Chennai - Copy

Bangalore-to-Chennai

இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஃபினி ஆல்ஃபா பேட்ச் 9 எடுக்க பேங்களூரை நோக்கிப் பயணித்த போது, அப்போது என்னிடம் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கிருஷ்ணகிரிக்கு அருகில் டயர் பஞ்ச்ர் ஆகி நின்றது. ஆள் கூட்டி வர சில கிலோ மீட்டர் நடத்தார்
குத்தாலிங்கம். ஜாக்கியை எப்படிப் பயன்படுத்தி ஸ்டெப்னி மாற்ற வேண்டும் என்று நாங்களே கற்ற நாள் அது.

வருடங்கள் மாறி விட்டன. வண்டி மாறி விட்டது, டிரைவர் வந்தாயிற்று. வாழ்க்கை மாறி விட்டது. நான் மட்டும் அதே நினைவுகளோடு, அதே நிடத்தில் இறங்கி நிற்கிறேன்.

‘சாரு கண்ணு கலங்குது!?’ என்று கலவரமாய்ப் பார்த்த டிரைவரைப் பார்த்து வெறுமனே சிரிக்கிறேன்.

வாழ்க்கை விசித்திரமானது. நேற்று அழுத தருணங்கள், திரும்பிப் பார்க்கையில் சிரிப்பு வரவழைக்கும். நேற்று சிரித்த தருணங்கள், திரும்பிப் பார்க்கையில் இன்று அழுகை வரவழைக்கும்.

இதில் எதிலும் சேராமல் ஏன் என்றே தெரியாமல் கண்களில் நீர் கட்டச் செய்யும் தருணங்கள் சில. எதற்கு கண்ணீர் என்று புத்திக்கு புரிவதற்கு முன் பொசுக்கென்று மனசு உதிர்க்கும் கண்ணீர்.

‘எத்தனை பேர் உதவிட உருவானேன் நான்!’

 

பெங்களூரை நோக்கிய பயணம்
தொடர்கிறது

பரமன் பச்சைமுத்து
13.10.2015

 

 

 

Bangalore-to-Chennai - Copy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *