அல்ஃபோன்ஸா மாம்பழம் வாங்குகிறீர்களா?

wp-16513788072136417922580023823367.jpg

அல்ஃபோன்ஸா என்றதும் ‘ஏக் ஹி சான் ஹே ராத் கேலியே!’ என்றவரின் பின்னிருந்து வந்து ‘ஒரேயொரு சந்திரன்தான் இரவுக்கெல்லாம்… ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்!’ என ‘பாட்ஷா’ படத்தின் பாடலில் இடையை காட்டி வரும் நடிகையே மனதில் வருவார் முன்பு எனக்கு.

இனி, ஒரு அட்டைப்பெட்டி நிறைய ரத்னகிரியிலிந்து வரவழைக்கப்பட்ட இந்த பழங்களை அனுப்பி வைத்த நண்பர் கேத்தன் நினைவில் வருவார்.

அல்ஃபோன்ஸாவோ வேறு வகை மாம்பழங்களையோ வாங்கினால், இயற்கையில் பழுக்க வைக்கப்பட்டது என்று தெரிந்தால், இவற்றை செய்யலாம்:

1. குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் உண்டு முழு பலன் பெறலாம்.

2. உண்பதற்கு முன், ஒரு 15 நிமிடங்கள் மாம்பழத்தை தண்ணீரில் (மூழ்குமளவிற்கு)போட்டு வைக்கவும்.  பழத்தின் பலனும் கிடைக்கும். அதீதமாக உடற்சூடாவதும் தடுக்கப்படும்.

3. மாம்பழத்தை 2 அல்லது 3 நாட்களில் உண்டு தீர்த்து விட வேண்டும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப வாங்குங்கள். அதிகம் வாங்குவதால் குளிர்சாதன பெட்டியில் அடைத்து பல நாட்களுக்கு பாதுகாக்க வேண்டியுள்ளது.

நாங்கள் இதை செய்தோம். அசல் சுவையை பெற்றோம்!

‘ஐயோ! மாம்பழம் சூடு!’ என்று மாம்பழத்தை தவிர்க்கவும் வேண்டாம், அளவுக்கு அதிகமாக உண்டு விட்டு கன்றுக்குட்டி போல் கழியவும் வேண்டாம்.  கோடை காலத்தில் நம் உடலுக்குத் தேவையான சத்துகளை தந்திடவே இறைவன் அதை இந்த பருவத்தில் தந்துள்ளான். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்!’ என்ற வள்ளுவனின் வரிகளை நினைவில் கொள்வோம். 

வாரித்தரும் இயற்கைக்கு நன்றி!

வசந்த கால வாழ்த்துகள்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
01.05.2022

#alphonsomangoes
#AlphonsoMango
#ParamanPachaimuthu
#Summer
#Vasanthakaalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *