29.04.2022 வளர்ச்சிப்பாதை…

சிலவற்றை விவரிக்கவோ விளக்கவோ முடிவதில்லை. நேற்றைய வளர்ச்சிப்பாதையும் அப்படியே என்று உறுதிபடுத்துகின்றன வரிசையாய் மலரவர்களிடமிருந்து வரும் பகிர்வுகள்.

அரங்கு நிறைந்த மலர்ச்சி அகத்தில், பழைய முகங்கள், புதிய பேட்ச் முடித்தவர்கள் என ஒவ்வொருவராய் கண்டறிந்து காண்பதே ஓர் உற்சாகம் தந்த உணர்வாய் இருந்தது.

‘உழைப்பிற்கு அங்கீகாரம் – பலன்’ ‘மலர்ச்சியோடு இணைந்திருக்க வேண்டிய முக்கிய நேரம் எது, மிக மிக முக்கிய நேரம் எது?’ ‘பிரச்சினைகளில் சிக்கி தன்னை இழப்பவர்களுக்கு உதவ நாம் செய்ய வேண்டியது’ ‘நம்பிக்கை வழி’ ‘வாழ்வின் வெளிப்பாடு’ ‘உறவுகளுக்குள் கொள்ள வேண்டிய அணுகுமுறை’ ‘தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகள் வரும் போது கொள்ள வேண்டிய நிலை’ ‘பிள்ளை வளர்ப்பு’ ‘எனர்ஜி நிலை’ என நேற்றைய வளர்ச்சிப்பாதை பல்வேறு கூறுகளை ஆழமாகத் தொட்டது.

கடைசிப் பகுதியான ‘புத்தகம் தரும் நமக்கான செய்தி – கேம்!’ (களேபரமாக!) கொண்டாட்டமாக ஆனதை காண முடிந்தது. அத்தனை சத்தம், கைதட்டல், திடீர் ஆழம், திடீர் இறை உணர்வு என பலதையும் கொண்டிருந்தது அது. மகேந்திரன், பாரத்குமார், குத்தாலிங்கம், டாக்டர் ஜனனி, ரமணி, கஜலட்சுமி, குர்ஷித் என ஒவ்வொருவரும் சொல்ல சொல்ல அதற்காக சொல்லப்பட்ட பகிர்வுகள் சிறப்பானவை.

அந்த நூல்களை அவர்களிடமே கொடுத்ததற்கு மகிழ்கிறேன்.

கற்றலை பகிர்ந்து கொண்ட
திருவெல்வேலி பாஸ்கரன், பஞ்ச்சி, காஞ்சிபுரம் அஷ்வின், புதுச்சேரி மகேந்திரன், சிதம்பர வடிவு, வாணி ப்ரதீப், சிவபுஷ்பலதா, பிரபாகரன் ஆகியோரின் பகிர்வுகள் நன்று.

ஜெயந்தி கிருஷ்ணா, புதுச்சேரி அனுசுசீலா, விஜய் சிவா, பூபாலன், ராஜலட்சுமி, பிரதீப், ராமராஜன், கார்த்திகேயன், ராஜேந்திரன் 1, ராஜேந்திரன் 2, நந்த கிஷோர், அஷோக், மணிகண்ட சுப்பையன் போல ஒன்றும் பேசாமல் உன்னிப்பாக கவனித்து ஒவ்வொரு அணுவையும் உள்வாங்கும் மலரவர்கள் பலர் இருந்தனர் எப்போதும் போல.

(வளர்ச்சிப் பாதைக்கு எப்போதும் தொடர்ந்து வரும், இம்முறை வெளியூரில் இருந்ததால் வரமுடியாமல் தவித்த கஸ்தூரி – முத்துமாலை போன்ற சிலரையும் நினைத்துக் கொண்டோம்)

ஒரே வளர்ச்சிப் பாதையில் எல்லாமே இருந்தது. மலரவர் எஸ்பி சிதம்பரத்தின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘கொஞ்சம் குழப்பம், சஞ்சலத்தோடதான் வத்தேன். அப்படியே எனக்குத் தேவையானது எல்லாம் வந்தது வளர்ச்சிப் பாதையில. நன்றி பரமன்!’

வளர்ச்சிப் பாதையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் எனும் நிலையில், வராதவர்களுக்கு எப்படி விளக்குவது? வந்தவர்களுக்கே தெரியும் நேற்றைய அனுபவம்.

நேற்று வளர்ச்சிப் பாதை விளப்கியதைப் போல தொடர்ந்து பயணிப்பவர்கள் பெறும் பலன்கள் சில உடனடியாகத் தெரியும், பல காலப்போக்கில் தெரியும், சிக்கல்களோடும் சிக்கல்களைத் தாண்டியும் வாழ்க்கையை வாழும் போது தெரியும். பல சிக்கல்கள் தவிர்க்கப் படும்.   தொடர்ந்து பயணிப்போம்!

இறைவன் அருள் செய்யட்டும்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
30.04.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *