புதுவை சிறப்பு வளர்ச்சிப்பாதை + பேட்ச் 59 பட்டமளிப்பு

அரங்கு நிறைந்த அவையோரோடு அட்டகாசமாக நடந்தது ‘முழுமலர்ச்சி திரள் 59 – பட்டமளிப்பு விழா + சிறப்பு வளர்ச்சிப் பாதை’ புதுச்சேரி, லே ராயல் பார்க் ஹோட்டலில்.

புதுச்சேரி மலரவர்களுக்கு மறுபடியும் கூடல் என்பதால் மகிழ்வு, மலரவர்களாக பட்டம் பெறும் புதியவர்களுக்கு ‘நாங்கள் இனி மலரவர்கள்!’ என்பதிலும், ‘இதோ, இவர்தான் எங்கள் பரமன், இது எங்கள் மலர்ச்சி, இங்கதான் நாங்க வகுப்புக்கு வர்றோம், லெவல் பாத்தீங்கல்ல!’ என்று தங்கள் விருந்தினர்களிடம் பெருமையாக காட்டுவதிலும் பெருமை பொங்கும் மகிழ்ச்சி!

வந்திருந்த விருந்தினர்களுக்கோ குபீர் வியப்பும், இன்ப அதிர்வும், மகிழ்ச்சியும், ‘அட…!’ என ஆடிப்போதலும் என கலவையான உணர்வுகள், அனுபவங்கள்.

பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரனின் பகிர்வுக்குப் பின் விளக்கப்பட்டவை, பலரை உலுக்கிப் போட்டன என்று கேள்வியுறுகிறோம். கௌதம் ஜூவல்லர்ஸ் குடும்பத்தின் விருந்தினராக வந்த ஒருவர், கல்லூரி முடிக்கும் தன் மகளின் வேலை பற்றிய பெருங்குழப்பத்திற்கு தீர்வு அதில் கிடைத்ததாக பகிர்ந்தார். புவனகிரியிலிருந்து வந்த வயலாமூர் பிள்ளை என்பவர் ‘அடிச்சி முறுக்கி விட்ட மாதிரி இருக்குப்பா. எதாவது கமிட்மெண்ட் எடுத்தே ஆவனும், வாழனும்!’ என்று பகிர்ந்தாராம்.

சென்னையிலிருந்து, காஞ்சிபுரத்திலிருந்து, விழுப்புரத்திலிருந்து, கடலூரிலிருந்து என பேட்ச் 1லிருந்து பேட்ச் 58 வரையிலான மலரவர்கள் புதிய பேட்ச் 59ன் பட்டமளிப்புக்கும் வளர்ச்சிப்பாதைக்கும் கூடியிருந்தது சிறப்பு.

சாந்தி, பவித்ரன், ஸ்ரீநிவாசன், முகேஷ், புருஷோத்தமன், சந்திரகலா, கார்த்திகேயன், விஷால் ஜெயின், சோலையாச்சி ஆகியோரின் பகிர்வுகள் நன்று என்பதைத் தாண்டி பட்டம் பெற்றோர் ஒவ்வொருவரின் பகிர்வும் சிறப்பு.

சேஷ்டா ஜெயினின் மார்வாடி ஆங்கிலப் பகிர்வு வித்தியாசம். பந்தன் மண்டலின் பெங்காலிப் பகிர்வும்.

‘நீங்க நகரக்கூடாது. 3 நாள் பெட் ரெஸ்ட்’ என்று மருத்துவர் கூறியும், வகுப்பில் வந்து அமர்ந்த சாந்தியின் நம்பிக்கை மிகப் பெரியது.

புதியவர்களை மலரவர்கள் வந்து பேட்ச் அணிவித்து வரவேற்றது எல்லாத்தரப்பிலும் கூடுதல் மகிழ்ச்சியை தந்தது.

பட்டமளிப்பைப் தொடர்ந்து வந்த மே மாதத்திற்கான ‘வளர்ச்சிப் பாதை’ மிக ஆழமானதும் சக்தியூட்டுவதாகவும் அமைந்ததை உணர முடிகிறது. ‘உழைப்பிற்கு பலன் வரும்!’ என்ற அந்த மலர்ச்சி உரை, மொத்த அவையையும் நம்பிக்கையை நோக்கி நகர்த்தி நிமிர்த்தியது.

மஞ்சுளா ஜெயின், ஜெய் கணேஷ், ரேஷ்மா, லோட்டஸ் சுகந்தி, சிந்து போன்ற புதிய விருந்தினர்களின் பகிர்வுகள் அதை உறுதி செய்தன.

நிறை மகிழ்ச்சி, நல்லுற்சாகம், கொண்டாட்டம், ஆழக் கற்றல், புதியன எதிர் நோக்கல், நல்லனுபவம் என நிறைவாக நிகழ்ந்தது மலர்ச்சி நிகழ்ச்சி.

முன்னின்று செயல்பட்ட மலரவர்களுக்கும், பின்னிருந்து இயக்கிய மலரவர்களுக்கும், இதற்கு உதவிய அத்தனை மலரவர்களுக்கும் ‘ Loving you so much’. தனித்தனியே உங்கள் ஒவ்வொருவருக்காவும் பிரார்த்திக்கிறேன்!

இது அத்தனையையும் எங்கள் மூலமாக நிகழ்த்திய இறைவனுக்கு… பாதம் பணிந்து நன்றிகள்!

நேற்று புதுச்சேரியில் நடந்த மலர்ச்சி நிகழ்ச்சி பலருக்கு உள்ளே விதைகள் ஊன்றிய, நல்லனுபவம் தந்த சிறப்பான நிகழ்வு!

உள்ளே வந்த அத்தனை பேரும் புதிய எனர்ஜியோடு வெளியே போயினர், புதிய எனர்ஜியோடு இயங்குவர் என்பது உண்மை.

இறைவன் துணை செய்யட்டும்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை,
    06.05.2022

KumaranHospitals

Malarchi #MalarchiPuducherry #Puducherry

ParamanTouring #ParamanPachaimuthu

ParamanSession #batch59graduation #Batch59 #ValarchipPaathai

ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *