வந்தது சாகித்ய விருது!

குமுதம் இதழால் எனக்கு அறிமுகப்படுத்தவர் மாலன்.  யதேச்சையாக படிக்கத் தொடங்கி அவரின் கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது எனக்கு ஒரு காலத்தில்.

தொலைக்காட்சி ஷோ நடத்திய மாலனை விட பத்திரிக்கையாளர் மாலன் சிறந்தவர் என்பேன்.

மறைந்த பத்திரிக்கையாளர் சுப்ரமணிய ராஜூ, சமகால நிகழ்வுகள் என எதைப் பற்றியும் மாலனால் வேறு பரிணாமத்தில் எழுதமுடியும். 

‘ஜன்னலுக்கு வெளியே…’ மாலன் கொள்ளும் பார்வை பலதையும் தொட்டு நிரம்பியிருக்கிறது. பாரதியைப் பற்றி நிறைய புதுத் தகவல்களை தேடித்தேடி என்னைப் போன்றோரிடம் கொண்டு வந்து சேர்த்தவர் மாலன்.

ஒரு நல்ல நூலை மொழி பெயர்த்து, தமிழுக்கும் அதை கொண்டு வந்து கொடுத்து விட்டு, இவ்வாண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய விருதுகளையும் வென்று விட்டார் மாலன்.

சாகித்ய அகாதமி விருது!
வாழ்த்துகள் மாலன் சார்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
26.06.2022

#SahityaAkademi
#WriterMalan
#SahityaAkademiAward

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *