
1991ல் கல்லூரி முடித்திருந்த சமயத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில்தேவ், அசாருதீன் கொண்ட இந்திய அணி – டேவிட்பூன் போன்றோர் கொண்ட ஆஸ்த்திரேலிய அணி, லாராவின் மே.இந்திய தீவு அணி ஆகியவை ஆடிய மேட்ச்களை மெத்த ஐயர் வீட்டின் மகாதேவ ஐயரின் கருப்பு வெள்ளை டிவியில் பார்த்திருந்தேன் மணக்குடியில். (ஐயர்கள் வீட்டுக்குள்ளும் போனேன் நான்!)
அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லை. (அதன் பிறகு சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டேன். 1992ல் டிவி வந்தது எங்கள் வீட்டுக்கு, மொத்த ஊரும் வந்து பார்த்தது). மகாதேவன் ஐயரின் மகன் சதீஷ் சிறுவன் அப்போது.
……
24.07.2022 இன்று
ஜப்பான் தமிழ்ச்சங்க நண்பர் ஒருவரின் பெற்றோருக்கு நடந்த 80 ஆம் ஆண்டு திருமண நிகழ்விற்கு சென்றிருந்தேன். எல்லோரையும் சந்தித்து மகிழ்ந்து, உணவு உண்கையில் என் இலைக்கு நேரே எதிரே ஒருவர் வெள்ளை சட்டை வேட்டியில் என்னையே பார்த்தபடி நிற்கிறார்.
‘யாருன்னு தெரியுதா?’
‘ம்…சதீஷ்?’ ‘சதீஷா நீ?’
‘ஆமாம்!’
‘அடேய் 30 வருஷத்துக்கப்புறம் பாக்கறேன்! இவன் என் ஊரு பையன்!’ ‘இங்க என்ன பண்றே நீ, சதீஷ்!?’
‘நான்தான் இந்த கேட்டரிங்கே!’
‘மாம்பலம் ஜயர்ஸ்… உன்னுதா?’
‘ம். ஆமாம்!’
‘முன்பு வெஸ்ட் மாம்பலம். இப்ப எங்க இருக்க?’
‘அதே வெஸ்ட் மாம்பலந்தான்!’
‘அப்பா எப்படி இருக்கார்?’
‘அப்பா இல்ல. அம்மா மட்டுந்தான்!’
‘என் நம்பர் எடுத்துக்கோ சதீஷ்!’
…..
மணக்குடி மெத்தை வீட்டு மகாதேவன் ஐயரின் மகன் சதீஷ்.
மணக்குடி சதீஷ் மாம்பலத்தில் கலந்து ‘மாம்பலம் ஐயர்’ ப்ராண்டாக நிற்கிறான்.
மகிழ்ச்சி
…
- பரமன் பச்சைமுத்து
சென்னை
24.07.2022