புதுப்பித்தல் வரிசையில்

இருபத்தியிரண்டாண்டுகளுக்கு முன்பு 1999ல் வந்த போது பதற்றம் கொஞ்சமும் உள்ளே ‘நடக்கனும் நடக்கனும்!’ என்ற வேண்டல் நிறையவும் இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2012ல் வந்த போது பதற்றம் இல்லை, ‘நடந்திடனும் நடந்திடனும், ஒழுங்கா தலை வாரிக்கனும் அதுதான் பிரிண்ட் ஆகி வரும்!’ என்ற கூடுதல் கவனம் இருந்தது.

இன்று பதற்றமில்லை, தலையைக் கூட வாரவில்லை, ‘நடக்கும்!’ என்ற நம்பிக்கையோடு சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன் பாஸ்போர்ட் அலுவலகத்தில்.

‘மேடம் டோக்கன் என் 70 போயிருச்சி. எங்களுது என் 42 இன்னும் வரலை’ என்பவர் காட்டும் முக கோணலையும், ‘சார், ரேண்டம் நம்பர் சார் 90 வரைக்கும் வரும்! ரேண்டம்’ என்று சொல்லும் சீருடை பணியாளரையும், அதன் பிறகும் முகத்தை கடுமையாக்கி கோணங்கி காட்டும் அவ்விளைஞனையும், இவனை கவனித்து நமுடுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வரிசையில் நிற்கும் மற்றவர்களையும் ரசித்துக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

என் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக.

  • பரமன் பச்சைமுத்து
    அமிஞ்சிக்கரை,
    16.09.2022

PassportRenewal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *