நாளெல்லாம் கடும் வேல
அந்தி சாயவும் அசந்து தூங்கிட்டேன்
காலை கண்முழிச்சி
காய்ஞ்சு போய் நிக்கறேன்
நல்லவர் ஒருத்தரு ஆரம்பிச்சாரு
நடுராத்திரியில க்ரூப் ஒண்ணு
அவராவே முடிவெடுத்து
அல்லாரையும் சேத்தாரு
ஆரோடயோ சண்டையாம்
அவராவே போய்ட்டாரு வெளிய
காலை கண்முழிச்சி
காய்ஞ்சு போய் நிக்கறேன்
என்ன க்ரூப்பு
எதுக்கு இந்த க்ரூப்பு
எதுவும் தெரியல
எவர்ட்ட கேப்பேன்!
‘ஐயா! யாருய்யா நீங்கல்லாம்?’
– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
15.11.2022
#Paraman #ParamanPachaimuthu #ParamanTouring #Manakkudi #Kizhamanakkudi #WhatsappGroup #Kavithai