இருமங்கிலும் ரயில்களின் பேரிறைச்சல், நடைமேடையில் ஓயாமல் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் பயணிகளின் பெருஞ்சந்தடி, மிக அருகில் ஊர்ந்து கொண்டே இருக்கும் பேட்டரி வாகனங்களின் ஒலிப்பான்கள் என எல்லா சத்தங்களுக்குமிடையே, மனப்பேய்களின் இறைச்சல்களுக்கு நடுவே அமைதி கொண்ட புத்தனைப் போல துயில்கிறான் இம்மனிதன் சென்ட்ரல் ரயில்நிலைய 10 ஆம் நடைமேடையின் நடுவே, ஒரு கொசுவலையைக் கட்டிக்கொண்டு.
ஏற்றலின் கருவறையிலிருந்து பிறக்கின்றன எல்லா நிம்மதிகளும். எதையுமே என்னால் மாற்றமுடியாது என்ற நிலையில் ஏற்றலே சடும் அமைதியை தரும். அதிலிருந்து அனைத்தும் பிறக்கும்.
நறுமண கொசுவிரட்டிகள் காற்றில் கமழ ஏழு நட்சத்திர வெண்பஞ்சணையில் சிலருக்கு கிட்டாத நற்துயிலை சடுமென்று இழுத்துப் போர்த்திக் கிடக்கிறான் இம்மனிதன். மகளை ரயிலேற்றி விட போன நான் இம்மனிதனை மனதிலேற்றிக் கொண்டு வந்து விட்டேன்.
பகலெல்லாம் உழைத்திருப்பதால் இரவில் நன்றாக உறங்குகிறான். இரவில் உறங்குவதால், பகலெல்லாம் நன்றாக உழைப்பான்.
போர்த்திக் கொள்ள தூக்கம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இம்மனிதனுக்கு.
– பரமன் பச்சைமுத்து
21.05.2023
#Sleep #தூக்கம் #ChennaiCentral #CentralStation #Paraman #WriterParaman #ParamanPachaimuthu #ParamanLifeCoach #Paraman #Coach #BeWithPositive #பரமன் #பரமன்பச்சைமுத்து
#Motivational #MotivationalSpeaker #LifeTeacher #TamilMotivational