எந்த கல்லூரி டாப் ?

கேள்வி: பரமன், எந்த கல்லூரி சிறந்தது?

பரமன்: நான் ஆகச் சிறந்த கல்லூரியில் படிக்கவில்லை. சுமாரான கல்லூரியில் படித்தவன்.

கல்வியின் தரம், ஆய்வுக் கூடம், படித்து வெளியேறியவர்கள் பெற்றிருக்கும் வேலை மற்றும் வளர்ச்சி, கல்வி முடித்து எந்த அளவுக்கு உலகிற்கு தயாராகி வருகிறார்கள் என பல அளவுகோல்களை வைத்து விகடன் பெரும் சர்வே ஒன்றை செய்தது. முடிவுகளும் வெளியாகி உள்ளன.

விகடன் சர்வே தந்திருக்கும் டாப் 10 கல்லூரிகள் பட்டியலை தருகிறேன்.

இந்திய அளவில் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தில் நிற்கிறது, அடுத்து ஐஐஎஸ்சி பெங்களூரு, அடுத்தடுத்து மற்ற ஐஐடிகள், பிறகு நம் திருச்சி என்ஐடி.்

டாப் 10 தமிழ்நாடு:

1. ஐஐடி மெட்ராஸ் (ஆல் இந்திய ரேங்க் 1)  2.என்ஐடி திருச்சி (இந்தியா ரேங்க் 8) , 3. விஐடி யுனிவர்சிட்டி, வேலூர் (இந்திய ரேங்க் 12) , 4. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை( இந்திய ரேங்க் 17), 5. அமிர்த விஸ்வ வித்யா பீடம், கோவை (இந்திய ரேங்க் 19), 6. எஸ்ஆர்எம், சென்னை (இந்திய ரேங்க் 24), 7. கலசலிங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர் (இந்திய ரேங்க் (39), 8. சாஸ்த்ரா, தஞ்சாவூர் (இந்திய ரேங்க் 41), 9. எஸ்எஸ்என் பொறியியல், சென்னை (இந்திய ரேங்க் 48), 10. சத்யபாமா, சென்னை (இந்திய ரேங்க் 54)

சென்னை மண்டலம்:
1.ஐஐடி சென்னை, 2. அண்ணா யுனிவர்சிட்டி. சிஇஜி கேம்பஸ், கிண்டி, 3. அண்ணா யுனிவர்சிட்டி, எம்ஐடி கேம்பஸ், குரோம்பேட், 4. எஸ்எஸ்என், 5. வெங்கடேஸ்வரா, 6. எஸ்ஆர்எம், 7. அண்ணா யுனிவர்சிட்டி, ஏசிடி கேம்பஸ், கிண்டி
8. சத்யபாமா, 9. சென்னை இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி, 10. ராஜலட்சுமி பொறியியல்

வடகிழக்கு மண்டலம்:
1. என்ஐடி திருச்சி, 2. விஐடி, வேலூர்
3. சாஸ்த்ரா, தஞ்சாவூர் 4.தந்தை பெரியார், வேலூர்

மேற்கு மண்டலம்:
1. அமிர்த விஸ்வ வித்யா பீடம், கோவை, 2. பிஎஸ்ஜி, கோவை, 3. CIT கோவை, 4. GCT, கோவை, 5. PSG, நீலாம்பூர், 6. குமரகுரு

தெற்கு மண்டலம்:
1. தியாகராஜர் பொறியியல், மதுரை, 2. அழகப்ப செட்டியார், காரைக்குடி, 3. அரசு பொறியியல், திருநெல்வேலி, 4. கலசலிங்கம், விருதுநகர்

நீங்களே புரிந்து கொள்ளுங்களேன்.
( இன்னும் விரிவான பட்டியல் விகடனில் உள்ளது. பார்க்கவும்)

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *