
சிரிப்பு ஓர் அழகு. சிரிப்பு சிரிப்பவருக்கு தருகிறது ஓர் அழகு. சிரிப்பு அழகாக அடுத்தவரையும் தொற்றுகிறது.
சிரிப்பு, சிரிப்பவரின் முகத் தசைகளை சீராக்குகிறது. சிரிப்பு, இதயத்தை இலகுவாக்குகிறது. ‘அழகாக இருக்க ஆசையா? அப்படியானால் சிரியுங்கள்!’ என்கிறது என் பழைய கவிதை (நூல்: மனப்பலகை). சிரிப்பு, சக்தி தந்து புத்தி சீர் செய்யப்படுகிறது.
சிரிப்பு, உயிரினத்தை மனிதனாக மாற்றுகிறது. சிரிப்பு, உளைச்சல்களை உதிரச்செய்கிறது.
இவ்வளவு இருந்தும், அளவோடு கணக்கிட்டு சிரிக்கும் மனிதர்களை, சிரிக்காத மனிதர்களைக் காண்கையில் சிரிப்பு வருகிறது!
தனியார் தொலைக்காட்சியின் அந்த நிகழ்ச்சியின் தலைப்பு பிடிக்கும் எனக்கு, அதையே இங்கும் சொல்கிறேன்.
‘கொஞ்சம் சிரிங்க பாஸ்!’
– பரமன் பச்சைமுத்து
06.06.2023
#சிரிப்பு #பரமன் #Laugh #Laughter #UAE #Malarchi #MalarchiBatch67
#ParamanLifeCoach #Paraman #ParamanPachaimuthu #LifeCoach
#ParamanCoaching #TamilMotivational