அசத்திய சந்தோஷம் டாக்டர்

IMG-20231201-WA0123

அண்ணா நகர் ஸ்டார்பக்ஸ் வாசலில் காரில் ஏறப் போனவன், கீழே சாக்கடை பொங்கி வழிவதால் வண்டியை நகர்த்தச் சொல்லி சாலையில் இறங்கி நின்றேன்.

‘ஹலோ சார்!’

குரல் கேட்டு திரும்பினால் இன்ப அதிர்ச்சி.

அப்பல்லோ, ட்ரிப்பிள் எம் என உயர் ரக பெருமருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும், எழும்பூர் சந்தோஷ் செஸ்ட் ஹாஸ்பிட்டலின் தலைமை மருத்துவர் நிற்கிறார். அறுவை சிகிச்சை கூடத்திற்குள் செல்லும் மருத்துவர்கள் அணியும் அதே நீல உடையில். பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ், பெக்டோரல் தசைகளெல்லாம் பிய்த்துக் கொண்டு வெளியே வரும்படியாக இருக்கிறது (பாடி பில்டிங் டாக்டர்!)

‘சார்! நீங்க எப்படி இங்க?’

‘உங்கள பாத்ததும் கார்லேருந்து குதிச்சிட்டேன்!’

சிக்னல் பச்சைக்கு மாறி வாகனங்கள் நகரத் தொடங்கிவிட்டன.

‘சரி! நான் உங்க கார்ல ஏறிக்கறேன். ரவுண்டானாவுல இறங்கிக்கறேன். என் வண்டி பின்னாலயே வரட்டும்!’

சில நிமிடங்கள் பயணித்தோம். கொஞ்சமே பேசிக்கொண்டோம். இரு பக்கமும் நிறைய மகிழ்ந்தோம்.

இறங்கியதும் சுயபடம் எடுத்துக் கொண்டோம்.

எவ்வளவு பெரிய மருத்துவமனைகளில் பணியாற்றும் எவ்வளவு பெரிய மருத்துவர், நம்மைப் பார்த்து இறங்கி விட்டாரே! மேன்மக்கள் மேன்மக்கள்தான்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
01.12.2023

#SanthoshamChestHospital #Paraman #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *