முன் குறிப்பு :
உடல் நலத்தை பெரிதும் கவனித்துக்கொள்ளும் நண்பரொருவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது சில மாதங்களுக்கு முன்பு. வருத்தியெடுத்த அந்த துன்பம் அதோடு போகவில்லை, டைஃபாய்டு அவர் குடலில் செய்துவிட்டுப் போன கோளாறுகளால் இன்னும் தொடர்கிறது துன்பம்.
குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் நோய்த்தொற்றுக்கே காரணம் என்பது பிறகே கண்டுபிடித்தார்கள். உள் நுழையும் மொத்த வாட்டருக்கும் ஆளுயர ஆளுயர இரண்டு ஃபில்டர் எல்லாம் போட்டுவிட்டார் இப்போது என்றாலும் இன்னும் மருத்துவம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் குணம் வேண்டி.
…..
மிக்ஜாம் புயலின் பெருமழையால் சென்னையின் பெரும் பகுதி மூழ்கியதும், மாநகராட்சி பணியாளர்கள் மோட்டர்கள் வைத்து இறைத்து வெளியேற்றி வடிய வைத்ததும், பள்ளிக்கரணை, வரதராஜபுரம், பெசண்ட் நகரின் சில பகுதிகள், வேளச்சேரி போன்ற இடங்களில் இன்னும் நீர் வெளியேறாமல் நிற்பதும் செய்திகளில் பார்க்கிறோம்.
நிவாரணப் பொருட்கள் தருவதும், ரப்பர் படகில் கூட்டி வத்து முகாமில் தங்க வைப்பதும், உணவு, உடை தருவதும் நடக்கிறது. அமைச்சர்களும் அதகாரிகளும் செய்கிறார்கள்.
இதற்கப்புறம் வருவதே பிரச்சினை என்று நினைக்கிறேன். பல இடங்களில் குடிநீரும் கழிவுநீரும் ஒன்றாய் கலந்து இருக்கலாம். இதை உடனடியாக சரி செய்வதே அரசு செய்யக்கூடிய முக்கிய பணியாக இருக்க வேண்டும். இதை சுத்திகரித்து இப்போதே சரி செய்யவில்லையென்றால்,
வரப்போகும் நாட்களில் உடல்நலக்கேடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.