அரேபிய எகிப்துக் குதிரைகள் நாவாய்களில் கடற்பயணம் செய்து கோடியக்கரையில் இறக்கப்பட்டன என்று படித்த மாணிக்க வாசகர் வரலாறும், திருவெற்றியூர் பக்கத்தில் நிறுத்தப் பட்டிருந்த மரக்கலங்களில் நல்ல குதிரைகளை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவிஜயம்(இந்தோனேசியா), கடாரம் (மலேசியா), சுமித்திரா தீவு, முனீர் பழந்தீவுகளுக்கு கடலில் பயணித்து வெற்றி கொண்டான் ஜெயங்கொண்டத்தை தலைநகராகக் கொண்டிருந்த சோழ வேங்கை ராஜேந்திர சோழன் என்று படித்த வரலாறுகளும் நினைவுக்கு வருகின்றன பாரீசுக்குப் போகும் ஒலிம்பிக்ஸ் குதிரைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கும் போது.
விமானத்தின் சரக்குப் பெட்டகப் பகுதியில் ஒரு பெட்டிக்கு இரண்டு என குதிரைகள் ஏற்றப்படுமாம். புல்லும், கொள்ளும், நீரும் எப்போதும் இருக்குமாம் அவைகளுக்கு. சறுக்கி விழாமலிருக்க இடையிடையே சட்டங்கள் உண்டாம். குதிரைகளோடே பயணித்துக் கவனிக்க ஓர் ஊழியரும் உண்டாம். மனிதர்களுக்கு வரும் ‘ஜெட் லேக்’ குதிரைகளுக்கும் உண்டாம்.
நின்று கொண்டே உறங்கும் குதிரைகள், வரலாற்றுக் காலங்களில் நின்று கொண்டே கடலில் பயணித்தன. இப்போது நின்று கொண்டே வானில் பயணிக்கின்றன.
மண்ணில் இறங்கி தயாராகி பாரீஸில் ‘கேலோப்பிக்கும் பட்டையைக் கிளப்பும் அவை. ஒலிம்பிக்ஸ் வரட்டும்!
– பரமன் பச்சைமுத்து,
திண்டிவனம்
25.07.2024
#Olympics #Parrys #Derby #குதிரை #ஒலிம்பிக்ஸ் #Olympics2024 #ParamanPachaimuthu #Paraman #பரமன்பச்சைமுத்து #ParamanTouring