திருமண நாள்

‘ப்பா… ஹாப்பீ எய்ட்டீன்த் வெட்டிங் அஏன்னிவெர்ஸரி!’ மகள் கட்டிக்கொண்டு சொல்லும் போதுதான் பதினெட்டு வருடங்கள் ஓடியே விட்டன என்பது புரிகின்றது.’எத்தனை பேர் வாழ்த்தி வளர்ந்த திருமண வாழ்க்கை!’ என்று மனம் நெகிழ்கிறது.
பயணித்த பாதைகள் மனதில் ஓடுகின்றன.
‘எங்கும் நிறைந்தவனே, எல்லை இலாதானே, எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே… நன்றி!’ மனம் கை கூப்புகிறது.

‘ஏங்க, காலைலயே கோவிலுக்கு போயிட்டு வந்திடலாமா?’ என்று கேட்கும் மனைவி வேறு மாதிரி தெரிகிறாள். இவ்வளவு வருடங்களில் எத்தனையெத்தனை விஷயங்களில் எனக்காக மாறியிருப்பாள், எவ்வளவு பொறுத்திருப்பாள்!      என்னை என் போக்கில் விட்டதே பெரும் வரமல்லவா! இவளுக்காக வேண்ட வேண்டும் என்று தோன்றுகிறது.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மணம் புரிந்த காட்சிகள் மனதில் வருகின்றன.

ஒரு விவரமும் தெரியாத வயதில் எல்லாம் தெரியும் என்பவனைப் போல் தொடங்கியது நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் நமக்கு நிறைய தெரியாது என்பது தெரிய வந்துள்ளது.
பரமன் பச்சைமுத்து

02.02.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *