சென்னைப் புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் அவ்வளவாக தமிழ் நூல்கள் கிடைக்காத அந்நாட்களில், அங்கிருந்து பயணித்து வந்து அள்ளிப் போவோம் நூல்களை. அமெரிக்காவிலிருந்து திரும்பி அப்படியே காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த கண்காட்சியில் புதையல்களை அள்ளிக் கொண்டு, நண்பர்களோடு இரவுக்காட்சி ‘ஆளவந்தான்’ பார்த்து விட்டு நள்ளிரவிற்கு மேல் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக பேருந்து பிடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

இரண்டான்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்டாலில் நானே இருந்து புத்தகம் விற்க நேர்ந்தது, வேறொரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த அந்நேரத்தில். இந்த ஆண்டு கொஞ்சம் ஸ்பெஷல். ‘புதிய தலைமுறை’, ‘நாதம் கீதம் பப்ளிகேஷன்ஸ்’, ‘கீதம் பப்ளிகேஷன்ஸ்’, ‘முத்து நாடு பதிப்பகம்’ ஆகிய ஸ்டால்களில் எனது நூல் ‘மனப்பலகை’ இரண்டாம் பதிப்பு கிடைக்கிறது. இறைவனுக்கு நன்றி!

 

பரமன் பச்சைமுத்து

புதுச்சேரி

03.05.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *