அமெரிக்க மலைப்பாம்பை அச்சுறுத்தும் அசத்தல் இருளர்கள்…

​’ஜீசஸ்… கெட்டிங் வொர்ஸ். வீ ட்ரைட்டு எவ்ரிதிங்…’
‘ம்ம்ம்… ஹூ கேன் டூ திஸ்?’
‘இரு…ளர்…கள்…!’
‘இரூ…லழ்…கல்…!’
‘தட்ஸ் ரைட்’
‘ஹூ ஈஸ் தட்?’
‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா!’
:பீப்பிள்? வீ ஹேவ் சிஸ்டம்ஸ், டெக்னாலஜி, சயிண்ட்டிஃபிக் அப்ரோச்…. ஸ்டில் நத்திங் ஈஸ் அச்சீவ்டு!  தே ஆர் ஜஸ்ட் ட்ரைபள் மென்.’
‘யே… லெட்ஸ் ட்ரை!’ 
‘கெட் தெம்… ஸ்டார்ட் த வீஸா ப்ராசஸ்’


எறும்பு, எலி, ஏரோப்ளேன் என்று எதற்குள்ளும் ஒரு மின்னனு சாதனத்தைச் செருகி வேவு பார்க்கவும் தங்களுக்கு வேண்டியதைச் செய்து கொள்ளவும் கை தேர்ந்தவர்கள் அமெரிக்கர்கள். அவர்களே கைபிசைந்து நின்றனர் ஃபுளோரிடா மாகானத்தில்.  ஃபுளோரிடா தேசியப் பூங்காவில் திடீரென சதுப்பு முயல்களைக் காணவில்லை. தொன்னூற்று ஒன்பது சதவீதம் அழிந்துவிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்த நிர்வாகம் அதிர்ந்து போனது. பறவைகளும் மான்களும் குறைந்து கொண்டே இருப்பதை கண்டறிந்து கவலைப்பட்டனர். பர்மிய மலைப் பாம்புகள் எனப்படும் ஒரே நேரத்தில் நான்கைந்து மான்களை விழுங்கக்கூடிய மலைப்பாம்புகளே இதற்குக் காரணம் என்று அறிந்ததும் அதைப் பிடிக்கும் வேலையில் இறங்கினர். கண்ணிகள், பொறிகள், மின்னணு சாதனங்கள், பெண் பாம்பின் உடலினுள் தகவல் அனுப்பும் தந்திரங்கள் என எல்லாம் செய்தும் ஒன்றும் பலனில்லை.  மலை முழுங்கி மகாதேவன்களாகிய அமெரிக்கர்களின் அனைத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டு இனப்பெருக்கம் செய்து ஏப்பம் விட்டன மலைப்பாம்புகள். 
டிஸ்கவரி சேனல், உயிரியல் பூங்காக்கள், ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான நிபுணர்கள், தனியார் நிறுவனங்கள் என எல்லோரும் முயற்சித்தும் ஒரு பாம்பையும் பிடிக்க முடியவில்லை. அவை பறவைகளை மான்களை விழுங்குவதை படம் மட்டுமே பிடிக்க முடிந்தது. 
‘ஜீசஸ்… கெட்டிங் வொர்ஸ். வீ ட்ரைட்டு எவ்ரிதிங்…’
‘ம்ம்ம்… ஹூ கேன் டூ திஸ்?’
‘இரு…ளர்…கள்…!’
‘இரூ…லழ்…கல்…!’
‘தட்ஸ் ரைட்’
‘ஹூ ஈஸ் தட்?’
‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா!’
‘பீப்பிள்? வீ ஹேவ் சிஸ்டம்ஸ், டெக்னாலஜி, சயிண்ட்டிஃபிக் அப்ரோச்…. ஸ்டில் நத்திங் ஈஸ் அச்சீவ்டு!  தே ஆர் ஜஸ்ட் ட்ரைபள் மென்.’
‘யே… லெட்ஸ் ட்ரை!’ 
‘கெட் தெம்… ஸ்டார்ட் தவீஸா ப்ராசஸ்’
அமெரிக்காவும் ஆங்கிலமும் அறியாத இருளர் இனத்து இரு மனிதர்கள் மாசியும், வடிவேலும் அமெரிக்காவிற்கு வரவழைக்கப் படுகின்றனர். 
‘பாரு… இத்தனை வருஷமா எல்லாம் வச்சி போராடிட்டோம். ஒண்ணும் மாட்டல. வெறுங்கையால புடிச்சிருவாங்களா இவங்க! புடிக்கறது இருக்கட்டும். ஒண்ணே ஒண்ண கண்டு பிடிக்க சொல்லு. ஒத்துக்கறோம்!’ என்ற ரீதியில் ஏளனமான பார்வைகள் வீசும் அமெரிக்கர்கள் சூழ வேலையை தொடங்கினர் மாசியும் வடிவேலுவும்.
இந்த இருளர்களின் வேலையைக் கண்டு அமெரிக்கர்கள் அசந்து போயினர். ஃபுளோரிடா தொலைக்காட்சி ஒன்று இவர்களைப் பற்றியே சிலாகித்துக் கொண்டிருக்கிறதாம் இப்போது.  கைபிசைந்து நின்ற எங்களுக்கு கை கொடுத்தவர்கள் இந்த மாசியும் வடிவேலும் என்கின்றனர் ஃபுளோரிடா பூங்காவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.
‘ஒண்ணையாவது கண்டுபிடிச்சு காட்டட்டும்’ என்று அதிகாரிகள் நினைக்க வேலையில் இறங்கிய நம்மூர் மனிதர்கள் இரு வாரங்களில் இருபது அடி பதினெட்டடி என்ற கணக்கில் பதினான்கு பாம்புகளை பிடித்து விட்டனராம். அதிர்ச்சியில் மலைப்பாம்பே உள்ளே போகுமளவிற்கு வாய் பிளந்து நிற்கிறதாம் ஊடகம்.
அமெரிக்காவிற்குப் போய் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள்  எழுத்தறிவில்லா இருளர் பழங்குடியின் இரண்டு மனிதர்கள்.  இயற்கையை இயற்கையோடு இயைந்து வாழ்பவனாலேயே புரிந்து கொள்ள முடியும். இயற்கையை புரிந்தவனாலேயே அதை எதிர்கொள்ள முடியும். இயற்கையை அறியாதவனே இயற்கையை வெற்றி கொண்டதாக கூவுகிறான். இயற்கையோடு இசைந்து இருப்பவன் இயற்கையை புரிந்து அதனோடு ஒத்து நகர்கிறான். வெற்றி தோல்வி என்பது இல்லை அவனிடத்தில். இயல்பை அறிந்து நடத்தல் என்பது அவனது வழி. 
: பரமன் பச்சைமுத்து

இளையனார்குப்பம்,மரக்காணம்

29.01.2017
Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *