Monthly Archive: November 2018

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து பறவைகளை நேசித்து பறவைகளுக்காகவே வாழும் சூழலியல் ஆர்வலர், பல்கிப் பெருகிவிட்ட செல்லிடப் பேசிகளின் அளவுக்கதிகமான அலைவரிசை வீச்சினால் அழியும் பறவைகளைக் காக்க வேண்டி அரசு, நீதிமன்றம், மக்கள் என்று எல்லா மட்டங்களிலும் போராடுகிறார். எவரும் செவிமடுக்கவே மறுப்பதோடல்லாமல் அவரை ஏளனம் செய்ய, ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

சிந்து சமவெளியைப் படித்த அறிஞருக்கு மலர்ச்சி வணக்கம்!

உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்று என்று ஒத்துக்கொள்ளப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில், திராவிட முத்திரைகள் உள்ளன என்று படித்துக்காட்டி உலகத்தை ஒத்துக் கொள்ளச் செய்து அதிர்வுகளை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன். ‘கஜினி முகம்மதுவை பதினேழு முறை ஓட ஓட விரட்டிய சோழனின் கல்லறை எங்கேடா?’ வகையில் கட்செவியஞ்சலில் வரும் புருடா பகிர்வுகளைப் போல அல்லாமல்… (READ MORE)

Uncategorized

சுமந்து செல்லும் சங்கதிகளால் கழுதைக்கும் மரியாதை வருகிறது

கோவையில் இறங்கிய விமானம் விட்டு இறங்கி பெட்டியை பெற்றுக் கொள்ளும் வரிசையில் நிற்கிறேன். யாரோ நம்மையே உற்றுக் கவனிப்பது போலொரு பிரஞ்ஞை வந்து அப்பக்கம் பார்க்கிறேன். சிரித்து கை நீட்டுகிறார் ஒருவர். ‘பரமன் சார்… நான் @#*#@*#”, பொள்ளாச்சி நேச்சுரல்ஸ்!’ ‘ஓ மகாலிங்கம் பார்க் கார்னர் ஹெச்டிஎஃப்ஸி பக்கத்துல!’ ‘ஆமாங்க!’ …. கோவையில் தோசார்ட் திறப்பு… (READ MORE)

Uncategorized

வேள்பாரி

காக்கா விரிச்சி, குலநாகினி, ஆட்கொல்லி விதை, கொடிகுலத்து வள்ளி, வேளிர் குலத்து மகள், குறிஞ்சி நிலத் தலைவன், காடறியும் ஆசான், கார்த்திகை நட்சத்திரங்கள், தேவவாக்கு விலங்கு, கொற்றவை கூத்து, துடும்பு, நட்பின் கபிலர், நாகரக்கரடு, விரலிமேடு, பகழியம்பு, சுருளம்பு, மூவிலைவேல், செங்கனச்சோழன், குலசேகரப்பாண்டியன், உதியஞ்சேரல், காடர்கள், திரையர்கள், கூவல்குடியினர், தந்தமுத்துக்காரர்கள், தட்டியங்காட்டுப் போர் என ஈராண்டுகளாக… (READ MORE)

Uncategorized

நினைவூட்டும் வசதிகள்

தொலைபேசி வழியே மட்டுமே தொடர்பு என்றிருந்த அந்தக்காலங்களில் முக்கிய நபர்களின் எண்களை மனனம் செய்து பதிய வைத்திருந்த தலைமுறையின் கடைசி எச்சங்களில் நானுமொருவன். அதே வழக்கத்தில் செல்லிடப்பேசி எண்ணையும் உள்ளே பதிய வைக்கும் பழக்கம் வந்தது. செந்தில்நாதன் என்றால் 9841025530 என்று பதினெட்டாண்டுகளுக்கு முன்பு பதிய வைத்தது இன்றும் உள்ளே நிற்கிறது. நவீன முறையில் சேமிக்கும்… (READ MORE)

Uncategorized

துடும்பு

பறம்பு நிலத்தில் கொற்றவைக் கூத்தின் போது பாரியின் மக்கள் பல்வேறு கருவிகளோடு துடும்பையும் இசைத்து காட்டையதிரச் செய்வார்கள் என்று சு.வெங்கடேசனின் வரிகளின் வழியே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இன்று க்ராண்ட்ஸ்கொயர் மாலில் மலர்ச்சி மாணவர் உதய்ஷங்கரின் நிறுவனக்கிளை திறக்கப் போன போது அதை தொட்டனுபவிக்க முடிந்தது. ஊர்ப்புறங்களில் ஊராட்சி அலுவலக அறிவிப்புகளை வெளிப்படுத்தும் முன் அடிக்கப்படும்… (READ MORE)

Uncategorized

‘நான் யார்?’

‘நான் யார்?’ ‘எப்படி அறிவது?’ என்ற கேள்விகளை வைத்துக் கொண்டு அலைபவர்களுக்கு… எதற்கு அறிய வேண்டும் இப்போது? நீ நீதான்! பிறிதொரு ஆழம் உனக்கு வேண்டியிருந்தால் வேண்டிய தருணத்தில் அதுவாக வெளிப்படட்டுமே, உன் இருத்தலை அனுபவி இப்போது. – பரமன் பச்சைமுத்து சென்னை 10.11.2018 Www.ParamanIn.com

Uncategorized

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

இரவு உணவிற்குப்பின் மீதி கால் வயிற்றை நட்சத்திரங்கள் கொண்டு நிரப்பலாமேயென்று வானம் பார்க்க வாசலுக்கு வெளியே வந்தேன். அடுக்ககத்தின் பார்க்கிங் பகுதியில் காரில் முதுகை சாய்த்துகொண்டு நட்சத்திரம் தேடியபோது, விழுந்த விளக்கொளியில் முதலில் தெரிந்தது மரக்கிளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் இருந்த இருட்டைவிட கருப்பான சில காக்கைகள். இரவைப் பகலாக்கும் தொழில்நுட்பங்கள், ஒளியை உமிழும் விளக்குகள்,… (READ MORE)

Uncategorized

சர்கார் – திரை விமர்சனம்

விஜய் அழகாக கச்சிதமாக இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். கேட்டதை அழகாகக் கொடுத்துள்ளார். ‘டெங்கு கொசு ஒழிப்பு – பொதுப்பணித்துறை’ என்பதில் தொடங்கி படம் நெடுக ஏ ஆர் முருகதாஸ் ஏமாற்றி விட்டார். வீ டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சர்கார்’ – சறுக்கல்.

Uncategorized

20181105_112134-2396744489192963227.jpg

சோளக்கொல்லை…

அண்ணாசாலையை இன்னும் ‘மவுண்ட் ரோடு’ என்றும், சென்னையை இன்னும் ‘மெட்ராஸ்’ என்றும், ரஜினியை ‘சிவாஜி’ என்றும், தனுஷை ‘வெங்கட் பிரபு’ என்றும், சூர்யாவை ‘சரவணன்’ என்றும் இன்னும் யாரேனும் விளிக்கக்கூடும்தானே. அப்படித்தான் ‘சோளக்கொல்லை’ என்பது எங்களுக்கு. முத்து முதலியாரின் கொல்லை அது என்பதெல்லாம் பிற்பாடு வெகு ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வந்தது. அரைக் கால்சட்டை அணிந்து… (READ MORE)

Uncategorized