தீரா நதி

Theeranathi

Theeranathi

காலைவரை

கைவீசி நடந்த

கமலவள்ளி இப்போது

கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள்.

 

காலையில்

கடைசி ஊர்வலமாம்.

 

கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன்,

கடன்களையாற்ற

கையூன்றி எழத்தான் வேண்டும்.

 

வாழ்க்கை ஒரு தீரா நதி.

எவர் பொருட்டும் அது நிற்பதில்லை.

சிலசமயம் வேகமாய் போகும்

நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது.

சிலகாலம்  மெதுவாகப் போகும் ஓரத்தில் மிதக்க விடுகிறது.

சிலசமயம் சுழலில் விடுகிறது.

சிலரைக் காலம் முடிந்ததென்று

ஒதுக்கிக் கரையில் தள்ளிவிட்டுப் போய்விடுகிறது.

 

யார் இருந்தாலும் இல்லையென்றாலும்

அது நிற்பதில்லை.

ஓடிக் கொண்டே இருக்கிறது வாழ்க்கை நதி!

 

– பரமன் பச்சைமுத்து  

1 Comment

  1. kumaran

    Loving you… How to swim in life river of puzzles. kindly post

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *