நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே. குமாரவேல் அருமையான மனிதர்

 

23736002_2037465243140399_3731457368389854892_o

 

 

பெரிய மனிதர்கள் வெற்றியாளர்கள் மிக எளிமையாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் உற்சாகமாக இருக்கிறார்கள்.

அடுத்த சக மனிதனை உற்றுக் கவனிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவனிடமிருந்து கற்க முயலுகிறார்கள்.

இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் புரிந்தவர் என ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுபவரும் ‘சாஷே’ என்ற ஒன்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவருமான சின்னிக் கிருஷ்ணன் அவர்களின் புதல்வரும், வெல்வெட் – சிக் – மீரா – ராகா குடும்பத்தின் இளவலும், இந்தியாவெங்கும் பரவி நிற்கும் அழகு சாதன நிலையமான ‘நேச்சுரல்ஸ்’ன் நிறுவனருமான திரு. சி.கே. குமரவேல் அவர்களை, மலர்ச்சி மாணவர் ஒருவரின் நேச்சுரல்ஸ் நிலையத்தை திறந்து வைக்கச் சென்ற போது சந்திக்க நேர்ந்தது.

அற்புதமான மனிதர்! அவரிடம் கேள்வி கேட்டு கற்பதற்குள், நம்மிடம் கேள்வி கேட்டு வாங்கி முகநூலில் நேரலையாக்கி விடுகிறார். நல்லது எதுவென்றாலும் பாராட்டுகிறார். அவரிடம் நாம் ஆட்டோக்ராஃப் வாங்குவதற்குள் நம்மிடம் அவர் வாங்கி விடுகிறார்
( ‘உங்கள் ‘மனப்பலகை’ நூலை நான் ஏற்கனவே வாசித்து விட்டேன். இது இரட்டாவது நூலா?’ என்று திகைக்க வைக்கிறார்!).

616 அழகு நிலையங்கள் இந்தியாவெங்கும் நிறுவி அறுநூறுக்கும் மேற்பட்டோர்களை தொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறார். 8000 பேர்களை எடுத்து பயிற்சி தந்து வேலை தந்து சொந்தக் காலில் நிற்க வைத்துள்ளார்.
எத்தனை குடும்பங்கள் மிளிர்கின்றன இவரால்! ஆனால் மிக மிக எளிமையாக நிற்கிறார்.

23736259_2037461096474147_5218139788191934644_o

இவர் வாழ வேண்டும். இவர் வழியே எண்ணற்ற இந்தியர்கள் பலன் பெற வேண்டும். வளம் கொழிக்கட்டும். பிரார்த்தனைகள்!

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
17.11.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *