ஓரிடத்தில் விதைத்தது ஓராறு இடங்களில் முளைக்கிறது

20190206_0633175241252973266149949.jpg

வளர்ந்து வரும் மகளிடம்
வளர்க்கலாம் ஒரு பண்பையென்று
வளர்த்தேன் ஓராசை

கொஞ்சி மகளையழைத்து
கொஞ்சம் மண்
கொஞ்சம் விதைகள் ஈந்தேன்

சிறு தொட்டியில் மண்ணையிட்டு
சிறு மகளின் கைகளினால்
சிறு விதைகளை ஊன்றினேன்

வெண்டை வெடித்து முளைத்தது
வீடு மகிழ்ந்து திளைத்தது
இன்முகம் வந்தது – படம்
இன்ஸ்டாக்ராமில் பறந்தது

தோழிகளுக்கெல்லாம் ஆசையாம்
தோட்டமொன்று மாடியில் வைக்கவே

ஓரிடத்தில் விதைத்தது
ஓராறு இடங்களில் முளைக்கிறது
மண்ணில் விதைப்பதோடு
மனங்களில் விதைக்கும் போதே!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
06.02.2019

***Malarchi App***

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *