தந்தையை இழந்த தனயனாக

20170507_184158.jpg

வந்தால் செல்வர் என்பது வாழ்வின் பெரும் விதி, நிலையாமை விதியே வாழ்வின் நிலைத்த விதி என்பதையெல்லாம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும், தோட்டத்தின் ஒவ்வொரு செடியும் மரமும் தந்தையை நினைவு படுத்துகின்றன, கையறு நிலையில் கண்ணீர் பெருக்கவே செய்கிறது.

சென்னை – புதுவை – திருவண்ணாமலை – வேலூர் – மயிலாடுதுறை – சீர்காழி – பெங்களூரு – திருப்பத்தூர் – சேலம் என பல இடங்களிலிருந்தும் நேரில் வந்திருந்து தழுவிய நூற்றுக்கணக்கான மலர்ச்சி மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், உடன் பணிபுரிந்த தோழர்களுக்கும், செல்லிடப்பேசியில் அழைத்து பேச முயற்சித்த, ஆறுதல் செய்தியனுப்பியோர் அனைவருக்கும் நன்றி. செல்ஃபோனிலிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கிறேன்.

குடும்ப மரபின் படி அடுத்தடுத்து நிகழ்த்த வேண்டிய காரியங்களில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.

நன்றி!
பரமன் பச்சைமுத்து
கீழமணக்குடி
11.01.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *