Tag Archive: மணக்குடி

மெத்த வூடு – சாரதா அம்மா

இன்று காலை சாரதா அம்மாவை பார்க்க போயிருந்தேன். அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க எதேச்சையாக அக்கா உமாவும் கூட வர, உமா – சிவா – சாரதா அம்மா என்ற கோர்வையால் பல பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன. …. ‘மெத்த வூடு’ என்றால் என்ன தோன்றும் உங்களுக்கு? மணக்குடியில் இருந்தவர்களுக்கு காய்ச்சார் மேட்டின் பாலதண்டாயுதம்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

குஞ்சய்யர்

அதற்கு முன்னால் அது மணக்குடியில் நடந்திருக்கிறதாவென தெரியவில்லை.  குஞ்சய்யரும் பலராம ஐயரும்தான் ‘ஏ சிவா! வாடா!’ என்று என்னை அதற்கு அழைத்துவிட்டு முன்னே நடந்து போனார்கள். அந்தி சாய்ந்ததும் வீடு திரும்புவார்கள், பெண் குழந்தைகள் அலங்கரித்துக் கொள்வார்கள், மணக்க மணக்க சமையல் செய்வார்கள், விளக்கு வைத்ததும் உண்பார்கள், ஊரே சீக்கிரம் உறங்கி விடும் என்பது என்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , ,

டைலர் கட அல்லது தீபாவளி…

இரவும் பகலுமென எல்லா நேரமும் இயங்கும் ‘டைலர் கடை’.  ஆயத்த ஆடைகளை வாங்கி அணிவதென்பது அவ்வளவு பழக்கத்திலில்லா அந்நாட்களில் துணியெடுத்து தையல் கடைக்கே வந்தனர் மக்கள். கந்தசாமி டைலர்மொத்த மணக்குடிக்கும் மட்டுமல்ல பக்கத்து ஊர்களான குறியாமங்கலம், ஆயிபுரம் என சுற்றுப் பகுதிகளின் எல்லா வீடுகளுக்கும் எல்லோருக்குமான ஒரே தையல்காரர். கந்தசாமி டைலர் என்பது அவர் பெயரென்றாலும்,… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

கப்பக்காரத் தாத்தா : வெள்ளை முயல்

‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’ கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான். கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

wp-16410883621398515048242616711124.jpg

சுடச்சுட வெண்ணெய்

அதிகாலை 05.50க்கு அருகில் வந்து ‘சிவா, ஆ… காட்டு! வாயத் தொற!’ என்று ஊட்ட வருகிறார் அம்மா. சுடச்சுட இப்போதுதான் கடைந்த வெண்ணெய்! லேசான புளிப்போடு வாயிலிருந்து, தொண்டையில் வழிந்து நெஞ்சு வரை வழிக்கிக் கொண்டே சூடாய் இறங்குகிறது வெண்ணெய்.  தயிர் நிறைந்த பெரிய பானையை வைக்கோல் பிரி சிம்மாடில் வைத்து, தரையில் தண்டாசனம் இட்ட… (READ MORE)

Manakkudi Manithargal

, ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை ‘சிவ்வழிபாட்டு மாலை’நோக்கம் ஒன்று நிறைவேறுகிறது

மு பச்சைமுத்து அவர்களின் முதல் குருபூசையில் மு பச்சைமுத்து அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட நூல் ‘சிவ வழிபாட்டு மாலை’. மணக்குடி (மணியார் வீட்டு) நடராஜன் ஐயரின் மகள் வயிற்றுப் பேரன் சென்னை சைதாப்பேட்டையில் இந்த நூலிலிருந்து சிவபுராணம் கற்றிருக்கிறான். எல்லோரையும் சிவபுராணம் சொல்லச் சொல்லும் அப்பா, இதோ இதைத்தான் விரும்பியிருப்பார்! இந்நூலின் நோக்கம் என்று அதன் முன்னுரையில்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம்.  யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும். இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி! -பரமன் பச்சைமுத்துமணக்குடி,18.09.2021… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-1627654482828.jpg

மாலை மஞ்சள் வெயிலும்…

மாலை மஞ்சள் வெயிலும்நீள நீல வானும்அறுவடை முடிந்த அன்னவயலும்ஓங்கி வளர்ந்த ஒத்தப் பனையும்ஆளரவமே இல்லா வெளியில்ஆட்காட்டி குருவியின் ஆரவாரமும் எனவாய்க்காங்கரையில் வாயெல்லாம் பல்லாக நான் கொண்டது நாட்படு தேறல் அனுபவம்! பரமன் பச்சைமுத்துமணக்குடி30.07.2021 Manakkudi Keezhamanakkudi Vayal Chakrasana Yoga

பொரி கடலை

, , ,

காமாட்டிப் பய

நீச்சல் மட்டுமல்ல உலகமே தெரியாத சிறுபிராயத்தில், வெள்ளமென நிறைந்திருக்கும் நீர்நிலையில், குப்புற விழுந்து மூச்சு முட்டி பிரஞ்ஞையிழந்து வாழ்வின் விளிம்பிற்குப் போய் வந்திருக்கிறீர்களா? நான் போய் வந்திருக்கிறேன். தவறுதலாக நீருக்குள் குப்புற விழுந்து மூச்சு முட்டி நினைவு தப்பும் நிலையில் பிட்டம் தெரிய மிதந்த என்னை முதலில் பார்த்து  அஞ்சலாட்சி அம்மாதான் வாய்குழறி கத்தி தெரியப்படுத்தினார்…. (READ MORE)

Manakkudi Manithargal

, , ,

வளர்ந்து நிற்கிறது தேக்கு மரம்

‘ஐயே, அறிவு இல்ல உனக்கு. நல்ல தீனிதானே திங்கற, இல்ல பீயத்திங்கறியா? சொல்லிட்டே இருக்கன். கேக்க மாட்டேங்கறே!’ வள்ளியம்மைப் பாட்டியின் குரல் உரத்து இப்படி வந்தால் வீட்டின் பின்புறத் தொழுவத்தில் நின்று பசுமாட்டிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.  மனிதர்களிடம் பேசுவது போலவே மாட்டிடம் பேசிக் கொண்டிருப்பார், சில நேரங்களில் உரிமையாக கோபத்தில் திட்டியும் தீர்ப்பார்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , , ,

wp-1617689855881.jpg

வாக்கு செலுத்தும் படலம்

‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்!’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்!’ இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன்.  மணக்குடியிலும் இதே கதைதான். பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது. படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

wp-1617602394335.jpg

குழந்தைகள்

அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , , , , , ,

wp-1614525167039.jpg

காமுட்டி விழா

‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , ,

wp-16106883271396509394169969006271.jpg

மாட்டுப்பொங்கல் கோலம்

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது.  இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-1603905485062.jpg

கண்ணே நீ கமலப்பூ…

‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

wp-16011008007623596063854740053067.jpg

‘புள்ள வூடு’ அல்லது ‘நடேசம் பிள்ளை’

மணக்குடி ஒரு சிறு விவசாய கிராமம். அஞ்சலகம் கூட அடுத்த ஊரான குறியாமங்கலத்தில்தான் என்றால் மருத்துவமனையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! மணக்குடி, குறியாமங்கலம், ஆயிபுரம் என்ற மூன்று கிராமங்களுக்கும் நடேசம் பிள்ளை என்றழைக்கப்படும் ஆர்ஐஎம்பி முடித்த ஹோமியோபதி கற்ற நடராஜன் பிள்ளை மருத்துவம் பார்த்தார். கிழக்குப் பார்த்த நத்தகோகாபால் பிள்ளையின் வீட்டு் வடவண்டைச் சுவற்றை வலது… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

wp-15793510869645133351545504007296.jpg

வீட்டுக்கு வந்த சாரைப் பாம்புக் குட்டி

பாம்புகள் என்றதும் என்ன தோணும் உங்களுக்கு? ‘வீட்டுக்குள்ள வந்துது, அடிச்சித் தூக்கிட்டோம்!’  நீண்ட கழியொன்றின் நுனியில் ஒரு பாம்புக் குட்டியை மாட்டித் தூக்கிக் கொண்டு வந்தார் எதிர் வீட்டு முருகதாஸ்.  ‘என்ன பாம்பு இது?’ ‘சாரை, குட்டி!’ தெருவில் தரையில் கிடத்தப்பட்டது பாம்பு. ‘செத்துப் போச்சி, தூக்கிப் போட வேண்டியதுதான்!’ ‘ஆமாம், செத்திடுச்சி!’ ‘திடீர்னு இப்படி… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

20170507_184158.jpg

தந்தையை இழந்த தனயனாக

வந்தால் செல்வர் என்பது வாழ்வின் பெரும் விதி, நிலையாமை விதியே வாழ்வின் நிலைத்த விதி என்பதையெல்லாம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும், தோட்டத்தின் ஒவ்வொரு செடியும் மரமும் தந்தையை நினைவு படுத்துகின்றன, கையறு நிலையில் கண்ணீர் பெருக்கவே செய்கிறது. சென்னை – புதுவை – திருவண்ணாமலை – வேலூர் – மயிலாடுதுறை –… (READ MORE)

Uncategorized

, , , ,

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,

IMG-20170423-WA0143.jpg

அந்தப் புத்தகங்கள்…

ஏன் அதைத் தந்தார் என்னிடம் அந்த சித்தப்பா என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பகிரக்கூடிய ஒன்றை தனக்குப் பிடித்தவருக்கும் தருவோமே அப்படியிருக்கலாம். ஆனாலும் அது என் அப்போதைய வயதிற்கு மீறிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ராஜவேலு சித்தப்பா ஏழாம் வகுப்பிற்குள்  நுழையும் என்னிடம் அதைத் தந்தார். முத்தையன் சித்தப்பா வாராவாரம் வாங்கிவரும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,