‘மாயா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

mAAYA2

mAAYA1

பணம் தந்துவிட்டு பயப்படத் தயாராக இருப்பவர்களை, எவ்வளவு பயம் காட்டி அனுப்புகிறார்கள் என்பதை வைத்தே பேய்ப் படங்களின் வெற்றி தீர்மானிக்கப் படுகிறது. ஆரம்பத்தில் இழுவையாக இருந்தாலும், சில சீன்கள் சரியாக இருந்தால் போதும் படம் தூக்கி நிறுத்தப்படும் என்ற லாஜிக் படி வந்திருக்கும் படம் ‘மாயா’. ஒதுக்குப் புறமான வீடு, அதைத் தேடி வந்து பேயிடம் மாட்டிக்கொள்ளவே குடியேறும் குடும்பம் என்ற அரதப் பழசான கதையை எடுக்காமல்,
‘பேய்ப்படத்திற்குள் வரும் பேய்ப்படத்திற்குள் பேய் வந்தால் எப்படியிருக்கும்?’ என்று யோசித்ததற்குப் பாராட்டலாம்.

இருக்கும் வரை ஏதும் தெரியா அம்மாஞ்சிகளாக இருப்பவர்கள், இறந்ததும் சகலமும் அறிந்த டிஜிட்டல் நோவோ பேய்களாக மாறி அசகாயங்கள் செய்வதென்பது எல்லாப் பேய் படங்களின் லாஜிக் என்றாகிப் போனது. இங்கும்.

பின்னனி இசை பேய் வரும் வேளைகளில் மிரட்டுகிறது.
நயன் தாராவை கோரப் படுத்தாமல் அழகாகவே விட்டதற்கு நன்றி.

கடைசி அரை மணி்நேரம்தான் படம் என்றாலும், அந்த அரை மணி நேரத்தை ரொம்ப நேரமாய் கடந்த ஓர் உணர்வு வருவது பலவீனம்.

வி-டாக்கீஸ் – வெர்டிக்ட்: ‘மாயா’ – யா… யா…

திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

mAAYA2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *