பெப்ஸியையும கோக்கையும் 

​தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை விக்ரமராஜாவின் வாயில் பனை வெல்லமும், ஆறாயிரம் வணிக அமைப்புகளுக்கு மாலையும் போட ஆசைப்படுகிறேன். 

மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பெப்ஸியையும் கோக்கையும் விற்பதில்லை என்று பெரும் முடிவெடுத்து எங்களை எழுந்து நின்று கைதட்ட வைத்துவிட்டார்கள். இந்த குளிர்பானங்களால் உடல் பருத்து சீர்கெட்டது ஒரு தலை முறை. இந்த முடிவால் காக்கப் படட்டும் நம் அடுத்த தலைமுறை.
வணிகப் பேரவையின் இந்த மாற்றம் மாணவர்களின் ‘மெரினா புரட்சி’யால் வந்த மாற்றம். 

ஒட்டு மொத்த தமிழகத்தையும் (இல்லை உலகத்தையும்!) அரசியல்-மதம்-சினிமா தாண்டிப் பார்க்க வைத்த அந்த மாணவர்கள் அறப்போராட்டத்தை மட்டும் நடத்தவில்லை. மக்கள் மனதில் விதைகளையும் விதைத்து விட்டுப் போய் விட்டார்கள்.  அவை வளர்ச்சி விதைகள், ஒவ்வொன்றாய் இனி முளைக்கும்!
தலைவர்களையும் தலையிலடித்துத் திரும்பிப் பார்க்க வைத்த, ‘மாட்டை’ வைத்து நாட்டை திரும்ப வைத்த

அந்த மாணவர்கள் வாழ்க! 
– பரமன் பச்சைமுத்து 

24.01.2017

சென்னை
Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *