நடந்தேறட்டும் நல் அரசியல்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராக வந்திருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். அட்டகாசம்! வாழ்க!  தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படட்டும்! வாழ்த்துகள் ஐயா!

நியமனம் செய்யப்பட்டவராக நுழைந்து தலைவராக வளர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். மிக நல்ல எதிர்கட்சியாக அமர்ந்து தன் குழுவோடு அரசியல் செய்யட்டும் அவர். வாழ்த்துகள்!

கோவை தொகுதி தவிர கிட்டத்தட்ட ஒட்டு மொத்த தமிழகத்திலும் மூன்றாம் இடம் வந்து திரும்பிப் பார்க்க வைக்கிறது நாம் தமிழர் கட்சி. வாழ்த்துகள்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மறுபடியும் மலர்ந்திருக்கிறது தாமரை. அந்த நான்கு பேருக்கும் வாழ்த்துகள்!

கொங்கு நாடு கட்சி முதன்முதலில் சட்டசபையில் நுழைகிறது. ஈ ஆர் ஈஸ்வரன் ஐயாவிற்கு வாழ்த்துகள். உங்கள் குரல் சட்டசபையில் ஒலிக்கட்டும்.

காங், பாமக, மதிமுக, மமக, விசிக, கம்யூ என பல கட்சிகளால் நிறைந்திருக்கப் போகிறது சட்டசபை இம்முறை. மநீம, நாம் தமிழரிலும் ஒவ்வொருவர் இடம் பெற்றிருக்கலாம் இந்த சட்டசபையில் என்ற எண்ணம் எழாமலில்லை.

நடந்தேறட்டும் நல்ல அரசியல். நடக்கட்டும் நல்ல ஆட்சி! ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
03.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *