நல்ல தொடக்கம்

நடந்ததை ஏற்றுக் கொண்டு ‘அடுத்தது செய்ய வேண்டியது என்ன?’ என்ற மனப்பான்மையில் இயங்குகிறார் மக்கள் நீதி மய்யத்தின் கமல் என்று எண்ணுகிறேன்.  முதல்வர் ஸ்டாலினின் வீடு தேடிப் போய் வாழ்த்து சொன்னதை இப்படியே ‘பார்க்க விரும்புகிறேன்’.

‘பயந்துட்டாரு! ச்சும்மா போய் பாத்து வச்சிக்கறாரு, நாளைக்கு பிரச்சினை ஏதும் வந்துடக்கூடாதுன்னு!’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கலாம். (அரசியல் கற்கிறார் போல!)

போய் பார்த்து வாழ்த்து சொன்ன கமலின் செயலே, உதயநிநிக்கு தூண்டுகோலாக இருந்ததோ என்ற எண்ணமும் உண்டு (உறுதியாகத் தெரியவில்லை. ஊகம்தான்!)

அவதூறாக வாய்க்கு வத்தபடி மற்ற தலைவர்களை பேசி, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்குமளவிற்கு இருந்த மனிதர்,
விஜய்காந்த்தையும் இன்னும் சில மூத்த தலைவர்களையும் போய் பார்த்து விட்டு வந்திருக்கிறாரே! மிக மிக நல்ல தொடக்கம்!

வாழ்க!

– மணக்குடி மண்டு
05.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *