வரவேற்கிறோம்!

கடந்த ஆண்டு நோய்த்தொற்றின் போது திருப்பத்தூரில் சித்த மருத்துவர் விக்ரம் குமார், சென்னையில் சித்த மருத்துவர் வீரபாபு ஆகியோரின் கண்காணிப்பில் நடந்த சித்த மருத்துவ மையங்களையும் அவற்றின் பலனையும் கண்ட போது, நம்மைப் போலவே பலரது மனதிலும் எழுந்த கேள்வி, ‘இதையே தமிழகத்தின் மற்ற இடங்களிலும் செய்தாலென்ன?’

புதிய தமிழக அரசு அதை முன்னெடுத்திருக்கிறது.
சென்னை வியாசர்பாடியில் 240 படுக்கைகள், மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகள் என சித்த மருத்துவ மையங்கள் அமைத்திருக்கிறார்கள்.
( மத்திய அரசின் ஆயுஷ் வழியே தாம்பரத்தில் சித்த மருத்துவ முகாம் ஒன்றும் தொடங்கப் பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்)

தருமபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் என மேலும் 12 இடங்களில் சித்த மருத்துவ மையங்களை அமைக்க தமிழக அரசு அமைக்க இருக்கிறது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.  
தமிழக அரசை பாராட்டுகிறோம்.

பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் கை கோர்க்கட்டும், நல்லன நடக்கட்டும்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
13.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *