நல்ல ஏற்பாடு

மருத்துவமனைகளில் படு்க்கைகள் இல்லை, மருத்துவமனை வாசலில் வரிசையாக நோயாளிகளோடு ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பிலேயே இறப்பு என தமிழக நிலவரம் இருக்கும் வேளையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனை வாசலில் ‘ஆக்‌ஸிஜன் பேருந்து’ என ஒரு அமைப்பை பெங்களூரில் ஏற்படுத்தி கவனம் கவர்ந்தது கர்நாடக அரசு. நோயாளிகள் காத்திருக்காமல் அவசரத்திற்கு பேருந்தில் அமர்ந்து ஆக்ஸிஜன் பெற்றுக் கொள்ளலாம் என்ற அந்த
அமைப்பு நல்ல ஏற்பாடு.  கர்நாடகம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளுக்கும் சில நாட்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு.

திருப்பூரில் அதைப் போன்று ஒரு ஆக்ஸிஜன் பேருந்தை ஏற்படுத்தி பெரும் உதவி செய்திருக்கிறார்கள் சில தன்னார்வலர்கள்.  தங்கள் பள்ளி வாகனத்தை தந்து உதவிய அந்தப் பள்ளிக்கும், அதில் ஆக்ஸிஜன் அமைப்புகள் ஏற்படுத்தி செயல்வடிவம் தந்த அந்த தன்னார்வலர்களுக்கும்… மலர்ச்சி வணக்கம்!

தமிழக அரசு இதை கையிலெடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆக்ஸிஜன் பேருந்துகள் ஏற்படுத்த வேண்டும்.

– பரமன் பச்சைமுத்து
13.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *