இதே்நாளில்தான் புலம் பெயர்ந்தேன்

10 ஆண்டுகள் முன்பு இதே நாளில் ராமு – ராதை – முகுந்தன் – ப்ரீத்தியிடம் விடை பெற்று பெங்களூரிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தேன்.

வேலூரில் நடந்து கொண்டிருந்த தாயம் பேட்ச் 2, பேட்ச் 3 வகுப்புகளுக்கிடையில் பெங்களூரு மந்த்ரி உட்லண்ட்ஸ் வீட்டைக் காலி செய்து சென்னை ஆர் ஏ புரத்திற்கு குடிவந்து விட்டு என் அப்பாவின் பிறந்த நாளன்று வணங்கிவிட்டு வேலூருக்கு (5 வது) வகுப்பெடுக்க வந்தேன்.

கலைஞர் ஆட்சி மாறி ஜெ ஆட்சி வந்தது அடுத்த சில நாட்களில்.

ஜேகேஎன் பழனி, அம்பாலால் ஆனந்த், குணசேகரன், அண்ணாமலை, அன்பு, குமரகுரு, அருணாச்சலம் போன்றோர் வகுப்பில் பயின்றார்கள் அப்போது. இதன் அடுத்த பேட்ச் சென்னையில் வந்தது. அதில் குத்தாலிங்கம், காதர் மொய்தீன், சிதம்பரம் ஸ்ரீவித்யா, பட்டுக்கோட்டை சுரேஷ், கவின்மொழி, ஹம்சலதா, டைம்லைன் ஸ்ரீதர் ஆகியோர் வந்தனர்.

பத்தாண்டுகள் பறந்து விட்டன. பந்தங்களாக உங்களை சம்பாதித்தேன்.

இறைவனுக்கு நன்றி!

வாழ்க! வளர்க!
பரமன் பச்சைமுத்து
20.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *