48 மணி நேரத்தில் செய்த நாயகர்கள்!

கோவையில் தொற்று அதிகரித்து விட்டது, மக்கள் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கோவை அரசு மருத்துவ மனைக்கும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குமே அதிகம் வருகின்றனர். படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை – இவை எல்லோரும் படித்த, பார்த்த செய்தி.

சங்கதி கேள்வி பட்டு தங்களது ‘ஆர்டர் அறக்கட்டளை’ மூலம் 48 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய் நிதி திரட்டி, கோவையின் இரு மருத்துவ மனைகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்தி தயார் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள் அமெரிக்காவில் வசிக்கும் ராஜேஷ் ரங்கசாமி – நித்யா மோகன் தம்பதியினர். 

48 மணி நேரத்தில் நிதி திரட்டி, தனியார் நிறுவனங்களிடம் பேசி, கோவை அரசு மருத்துவமனையில் 51 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி கட்டமைப்பு, 5 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், இஎஸ்ஐ மருத்துவமனையில் 27 லட்சம் மதிப்பில் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்திக் கட்டமைப்பு, 3 லட்சத்தில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, எல்லாமும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. (ஆமாம்! பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன!!!!!) கோவை மக்கள் பயன்பெறுவார்கள்! வாழ்க!

இந்த தம்பதிக்கும், அந்த ‘ஆர்டர் அறக்கட்டளை’க்கும், அவரது வேண்டுகோளை ஏற்று உலகம் முழுவதிலிருந்தும் நிதி தந்தோருக்கும்… மலர்ச்சி வணக்கம்!

இப்படி, ‘இந்த மருத்துவமனைக்கு இதெல்லாம் தேவை, நீங்க பண்ணிக் குடுத்துடுங்கப்பா!’ என்று தேர்வு செய்து கொடுத்து விட்டால் என்ன. வளங்கள் சரியாக முறைப்படுத்தப்பட்டு வளர்ச்சிக்கு உதவுமே!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
21.05.2021

Facebook.com/ParamanPage

#OrderCorporation
#RajeshRangasamy
#NithyaMohan
#Covai
#TN

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *