ஆக்ஸிஜன் அளவை உயர்த்துகிறதாம் ‘கிராம்புக் குடிநீர்!’

ஆக்ஸிஜன் குறைபாட்டால் செறிவூட்டிகளையும் சிலிண்டர்களையும் தேடி அலையும் வேளையில், ‘கிராம்புக் குடிநீர்’ என்று ஏற்கனவே சித்தமருத்துவத்தில் பரிந்துரைக் கப்பட்ட பானத்தை நோயாளிக்குத் தந்து ஆக்ஸிஜன் அளவை உயர்த்தியுள்ளார்கள் சேலம், நாமக்கல் மாவட்ட சித்தமருத்துவர்கள் என தகவல் வருகிறது.

கிராம்பு 10 கிராம், ஓமம் 20 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், மிளகு 10 கிராம், இஞ்சி 10 கிராம், அதிமதுரம் 20 கிராம் ஆகிவை சேர்ந்த 80 கிராம் பொடியை 250 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து 60 மில்லியாக காய்ச்சி எடுத்தால் கிராம்பு குடிநீர் என்கிறது தரவுகள்.
இதை 10 நிமிடத்திற்கு ஒருமுறை என 2 முறைகள் தரவேண்டும் என்று சித்த மருத்துவர்கள் சொல்வதாக செய்திகள் பதிவாகியுள்ளன.

இது உதவுகிறது என்றால் உண்மைத் தன்மை இருந்தால் அடிப்படையை வெறுக்காமல் மற்ற இடங்களில் இருப்போருக்கு உதவும் வகையில் இது பகிரப்பட வேண்டும்.

அவரவர்களாகவே முடிவுக்கு வந்து கணக்கில்லாமல் கைக்கு வந்த கிராம்பையும் ஓமத்தையும் கொதிக்க வைத்து ஐந்து வேளை ஆறு வேளை என குடித்து வயிற்றைக் கெடுத்துக் கொள்வதற்குள் சித்த மருத்துத்துறை சரியான வழிகாட்டுதலை வெளியிடட்டும்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
23.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *