கார்பன் உமிழும் பேருந்துகள் போகட்டும்!

சவுதி அரேபியாவின் இளவரசர் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவும் கரிமில வாயு உமிழ்வை பெருமளவு குறைக்கவும் ‘சவுதி முழுக்க 1 கோடி மரங்கள் வளர்ப்போம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

மரங்கள் இருந்த பகுதிகள் பாலைவனமாக மாறி வரும் வேலையில், பாலைவனத்தில் 1 கோடி மரங்கள் என்பது நினைக்கவே மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வெற்றி பெறட்டும் இத்திட்டம். வாழ்க!

இந்தியாவைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகள் முன்பு தொடங்கிய காற்றாலை மின்சாரம், இப்போது சூரிய சக்தி என்ற வகை முன்னெடுப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. தொழிற்சாலைகளுக்கு அடுத்து பெருமளவு கார்பன் உமிழ்வைச் செய்து சூழலை மாசடையச் செய்பவை பொது போக்குவரத்து பேருந்துகளே என்று ஓர் ஆய்வு முடிவு சொல்கிறது.

இங்கே தமிழகத்தில் புதிய பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களின் அரசு தமிழகத்தின் அரசுப் பேருந்துகளையும் அரசு வாகனங்களையும் மின்சார சக்தி வாகனங்களாக மாற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சூரிய சக்தி மின்சாரம் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். அரசுப் பேருந்துகளை கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக மின்சக்தி / பேட்டரி வாகனங்களாக மாற்றிட சிந்திக்க வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு செய்யும் உதவியாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டமாகவும், தமிழகம் முன்னுதாரனமாக நிற்கும் திட்டமாகவும் இது விளங்கும்.

தமிழக முதல்வர் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
24.05.2021

#Environment
#Environmental
#TN

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *