கப்பா… அடங்’கப்பா’!

கப்பா, டெல்டா, ஆல்ஃபா, பீட்டா, காமா, ஜீட்டா, எப்சிலான், லோட்டா – நல்லவேளை பெயர்களை வைத்தார்கள்!

போன நூற்றாண்டின் பெருந்தொற்று ஸ்பெயினில் முதல் முதலில் கண்டறியப்பட்டாலும், அது சீனாவிலிருந்தே பரவியதாக சிங்கப்பூர் நண்பர் ஒருவர் சில தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்தார். ஆனால்  கண்டறியப்பட்ட இடத்தைப் பொறுத்து சூட்டப்பட்ட பெயரான ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ நிலைத்து விட்டது.

கொரோனாவை ‘சைனீஸ் வைரஸ்’ என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பொதுவெளியில் சொல்லலும் போதெல்லாம், சீனா ஆட்சேபித்தது.

கோவிட் 19 இரண்டாம் அலையில் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட பி 1617 வகை கோவிட் 19 வைரஸை, ‘இண்டியன் வேரியண்ட்’ என்றே உலக ஊடகங்கள் குறிப்பிட, முக்கியமாய் அது ஒரு பெருமை போல இந்திய ஊடகங்களும் சொல்ல, ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்து கடுமையாக எதிர்த்தது. பி 1.617.1, பி 1.617.2 என்று அறிவியல் பெயர் பொதுவெளி பயன்பாட்டுக்கு வந்தது.

இதோ, உருமாற்றம் கொண்ட ஒவ்வொரு கொரோனா வைரஸுக்கும் பெயர்களை அறிவித்து விட்டார்கள். இல்லையென்றால், ஸ்பேனிஷ் ஃப்ளூ போல சில நூறரறாண்டுகள் கழித்து ‘இந்தியன் கொரோனா’ என்று ஆக்கிவிடும் உலகம்.  இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் வகைகளுக்கு ‘கப்பா’, ‘டெல்டா’ என்று பெயரிட்டு விட்டார்கள்.

கப்பா… (அடங்கொ)(க)ப்பா…
அடங்கப்பா!

– பரமன் பச்சைமுத்து
02.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *